ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் சந்திப்பு!

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் சந்திப்பு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் சந்தித்து வருகின்றனர்.

நேற்று சட்டப்பேரவையில் கோடநாடு வழக்கு மீண்டும் விசாரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இதற்கு நேற்று சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்துக் கூட்டணிக் கட்சிகளான பாஜக் மற்றும் பாமக் கட்சிகளும் வெளியேறினர்.

இந்நிலையில், இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசி வருகின்றனர். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மனோஜ்பாண்டியன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com