ஜெயராமன் ரகுநாதன்
தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.
இந்திய கார்ப்பரேட் உலகில் பல உயர் பதவிகள் வகித்த சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்டான ஜெயராமன் ரகுநாதன் Knowledge Capital Investment Group என்னும் லாப நோக்கமற்ற நிறுவனத்தின் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
பல முன்னணி இதழ்களில் இவர் எழுதிய சிறுகதைகளும் கட்டுரைகளும் வெளி வந்திருக்கின்றன. கல்கி மற்றும் மங்கையர் மலரில் தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேல் தகவல் தொழில் நுட்பக்கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஏராளமான சிறுகதைகளையும் மேடை ஏற்றப்பட்ட ஆறு நாடகங்களையும் எழுதியிருக்கிறார்.
சிறந்த தொழில் முனைவோர் விருதும், மைலாப்பூர் அகாடமியின் சிறந்த நாடகாசிரியர் விருதும், ”வென்றார்கள் நின்றார்கள்” புத்தகத்துக்கான பரிசும் பெற்றவர். இவரின் ஆடியோ விஷுவல் உரைகளும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.