உலகின் மிகப்பெரிய ஐமேக்ஸ் தியேட்டர்.. ஜெர்மனியில் உருவாக்கம்!

உலகின் மிகப்பெரிய ஐமேக்ஸ் தியேட்டர்.. ஜெர்மனியில் உருவாக்கம்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

உலகத்திலேயே மிகப்பெரிய ஐமேக்ஸ் தியேட்டர் ஜெர்மனியில் கட்டப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமான திரைப்படங்களை ஐமேக்ஸ் தியேட்டர்களில் பார்க்கும்போது ஏற்படும் திரில், மற்ற  திரையரங்குகளில் பார்க்கையில் கிடைக்காது என்று சினிமா ரசிகர்கள் கருத்து. அதற்கேற்றவாறு மிகப்பெரும் 70 எம்.எம் திரைகள் கொண்ட  பிரம்மாண்டமான திரையரங்கம் என உலகம் முழுவதும் ஐமேக்ஸ் தியேட்டர்கள் சினிமா ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் ஜெர்மனியின் லியோன்ஸ்பெர்க் பகுதியில் உலகிலேயே மிக பெரிதான ஐமேக்ஸ் திரையரங்கம் கட்டப்பட்டுள்ளது. இந்த திரையரங்கின் ஸ்க்ரீன் 70 அடி உயரமும், 125 அடி அகலமும் கொண்டதாகும். ஒப்பீட்டளவில் போயிங் 737 மாடல் விமானத்தின் நீளத்தை விட இந்த திரையரங்கின் ஸ்க்ரீன் நீளம் அதிகம்! இந்த திரையரங்கில் முதல் படமாக ஜேம்ஸ் பாண்ட் படமான நோ டைம் டூ டை வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com