கீரை ஸ்வீட் கார்ன் வடை

கீரை ஸ்வீட் கார்ன் வடை
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தேவையானவை:

ஸ்வீட் கார்ன்-3

அவல்அரை கப்

பொட்டு கடலைஅரை கப்

சிவப்பு மிளகாய்-4

பச்சை மிளகாய்-3

இஞ்சி-1துண்டு

முளைக்கீரைஅரை கப்

சீரகம்அரை கப்

எண்ணெய்பொரிக்க தேவையான அளவு

பெருங்காயம்-2ஸ்பூன்

செய்முறை:

அவலை 10 நிமிடம் ஊற வைக்கவும் .கீரையை நறுக்கி வைக்கவும்.மிக்ஸியில் பச்சைமிளகாய்,சிவப்பு‌மிளகாய் பொட்டுக்கடலை,சீரகம் சேர்த்து பொடி செய்யவும்.பின்னர்ஸ்வீட்கார்ன் உப்பு பெருங்காயம்

சேர்த்து வடை பதத்திற்கு அரைக்கவும் பிறகு நறுக்கிய கீரை அரைத்தஸ்வீட்கார்ன் கலவை ஊற வைத்த அவல் எல்லாவற்றையும் நன்றாக கலந்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் வடைகளை‌தட்டி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சுவையான "கீரை ஸ்வீட் கார்ன் வடை" ரெடி.

logo
Kalki Online
kalkionline.com