பஞ்சாபில் அரசியல் குழப்பம்: இன்று அவசர அமைச்சரவைக் கூட்டம்!

பஞ்சாபில் அரசியல் குழப்பம்: இன்று அவசர அமைச்சரவைக் கூட்டம்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

பஞ்சாபில் மூத்ததலைவர்கள்அடுத்தடுத்து பதவி ராஜினாமா செய்து வரும் நிலையில்,இன்றூ அவசர அமைச்சரவைக்கூட்டத்திற்குஅம்மாநில முதல்வர்சரண்ஜீத்சிங்அழைப்புவிடுத்துள்ளார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த நவ்ஜோத்சிங்சித்து நேற்றுதன் பதவியைக் காரணம் குறிப்பிடாமல் ராஜினாமா செய்தார். இதையடுத்து அவருக்கு ஆதரவாக மாநிலப்பொதுச் செயலாளர் யோகிந்தர்திங்ரா, மாநிலப்பொருளாளர், உயர்கல்வித்துறைஅமைச்சர்ரசியாசுல்தானாஆகியோரும் பதவி ராஜினாமாசெய்ததால் பஞ்சாபில் அரசியல்குழப்பம்நிலவி வருகிறது. பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அங்கு நேர்ந்துள்ள உட்கட்சிப் பூசலும் அரசியல் குழப்பமும் கட்சியை பதற்றமடையச் செய்துள்ளது.

இந்நிலையில், அங்கு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்ய அமைச்சரவையின் அவசரக்கூட்டத்திற்கு முதல்வர் சரண்ஜீத்சிங் இன்று அழைப்புவிடுத்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com