BREAKING: இன்று முதல் ஆவின் பொருட்கள் விலை உயர்வு!

BREAKING: இன்று முதல் ஆவின் பொருட்கள் விலை உயர்வு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்த்தப்படுவதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆவின் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:

ஆவின் நிறுவனத்தின் தயாரிப்புகளான நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட பொருட்களின் விலை இன்று முதல் உயர்த்தப் படுகிறது. அதன்படி, 1 லிட்டர் ஆவின் நெய் ரூ.515-ல் இருந்து ரூ.535 ஆக உயர்ந்துள்ளது. அரை லிட்டர் தயிர் ரூ.27-லிருந்து ரூ.30 ஆகவும், குல்பி ரூ.25-ல் இருந்து ரூ.30 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும் 200 கிராம் பாதாம் பவுடர் ரூ.80-லிருந்து ரூ.100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

-இவ்வாறு ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு தமிழக பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. வழக்கமாக பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை விலை உயர்வு தொடர்பாக ஒரு வார காலத்திற்கு முன்பாகவே  பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை வழங்கப்படும்.

ஆனால் இம்முறை முன்கூட்டியே தகவல் சொல்லப்படாததால், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com