3 வேளையும் அம்மா உணவகங்களில் இலவச உணவு: தமிழக அரசு அறிவிப்பு!

3 வேளையும் அம்மா உணவகங்களில் இலவச உணவு: தமிழக அரசு அறிவிப்பு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மாநகரில் கடந்த 2 நாட்களாக கன மழை வெளுத்து வாங்குகிறது.அதுமட்டுமல்லாமல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று எச்சரித்துள்ளது சென்னை வானிலை ஆய்வுமையம். மேலும் சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் அம்மா உணவகங்களில் 3 வேளியும் இலவச உணவு வழங்க சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவல்:

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை சென்னை மாநகராட்சியும் தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. மேலும் மழைபாதிப்புகளை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செயல்படும் அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்.

–இவ்வாறு சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை முழுவதும் உள்ள 20 உணவு தயாரிக்கும் கூடங்களில் இருந்தும் ஒரு வேளைக்கு 1.5 லட்சம் பேர் சாப்பிடும் அளவுக்கு உணவு தயாரிக்க அவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்க உதவியாக அம்மா உணவக ஊழியர்களை மூன்று வேளையும் பணிக்கு வந்து உணவு பரிமாறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் மொத்தமுள்ள 403 அம்மா உணவகங்களும் முழுநேரமும் செயல்பட வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது..

logo
Kalki Online
kalkionline.com