5-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்: 33 லட்சம் பேர் இலக்கு!

5-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்: 33 லட்சம் பேர் இலக்கு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள 5-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு தெரிவித்ததாவது:

கடந்த மாதம் 12ஆம் தேதி தமிழகத்தில் முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் கடந்த மாதம் 12-ம் தேதி நடைபெற்றது. அந்த முகாமில் 28.91 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அதையடுத்து கடந்த 19-ம் தேதி நடைபெற்ற 2-வது தடுப்பூசி முகாமில் 16.43 லட்சம் பேரும், 26-ம் தேதி நடைபெற்ற 3-வது கட்டமாக நடந்த முகாமில் 25.04 லட்சம் பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். அதையடுத்து 4-வது மெகா தடுப்பூசி முகாமில் தமிழகத்தில் 17 லட்சத்து 19 ஆயிரத்து 544 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள 5-வது கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் 1,600 மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது.

-இவ்வாறு தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com