அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் உச்சநீதிமன்றம் உத்தரவு!

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் உச்சநீதிமன்றம் உத்தரவு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவின்முறைகேடுவழக்கு தொடர்பாக கடந்த வாரம் கர்நாடகாவில் வைத்து கைது செய்யப்பட்டார். அவருக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன்வழங்கியுள்ளது. .

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறிரூ.3 கோடி மோசடி செய்ததாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் இந்த வழக்குகளில் தனக்கு ஜாமீன் கேட்டு, கடந்த மாதம்17-ஆம்தேதி மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் மனு தக்கல் செய்ய, அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி உச்சநீதி மன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அவர் தலைமறைவாக இருந்ததாக கூறி, அவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் 20 நாட்களுக்குப் பின் கடந்த வாரம் கர்நாடகாவில் வைத்து ராஜேந்திர பாலாஜி கைதுசெய்யப்பட்டார்.

இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தாகல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அதன்பிறகு ராஜேந்திர பாலாஜிக்கு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் ராஜேந்திர பாலாஜி தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமென்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com