Saba Nayagan Movie Review 
வெள்ளித்திரை

விமர்சனம் சபா நாயகன்!

ராகவ்குமார்

'அட இப்படி ஓரு காதல் கதை படத்தை பார்த்து ரொம்ப நாளாச்சு 'என ரசிகர்கள் வியக்கும்படி முழு நீள காதல் படமாக வந்துள்ளது சபா நாயகன். அசோக் செல்வன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை CS கார்த்திகேயன் இயக்கி உள்ளார்.

பள்ளி, கல்லூரி என படிக்கும் இடங்களில் ஏதாவது ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கும் சபா எனும்  அரவிந்த்திற்க்கு எந்த காதலும் கை கூட வில்லை. இருந்தாலும் முதுகலை படிக்கும்  இடத்தில் காதலிக்க வாய்ப்பு கிடைக்கிறது. இந்த காதல்  வெற்றி பெறுகிறதா? இல்லையா? என்பதை விளக்கி சொல்கிறான் சபா நாயகன்.

காதல் தான் அனைத்தும், காதல் புனிதமானது என்று முந்தையை கால கட்டத்தில் கதை சொன்ன தமிழ் சினிமா போல் இல்லாமல் காதலும் கடந்து போகும் ஜஸ்ட் லைக் தட் என்று நகைச்சுவை கலந்து  சொல்கிறது சபா நாயகன். இன்றைய இளைய தலைமுறையினர் தெளிவாக இருக்கிறார்கள், என்று தெளிவாக புரிய வைக்க முயற்சி செய்துள்ளார் டைரக்டர்.

ஒரு செடியில் ஒரு பூ தான் பூக்கும், ஒருத்தர் மேலதான் காதல் வரும் போன்ற தமிழ் சினிமா வசனங்களை கிண்டல் செய்திருக்கிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவனாக வரும்போது அசோக் செல்வன் குறும்பும் காதலுமாக நடித்திருக்கிறார். காதல் இளவரசன் பட்டத்தை இன்றைய நாயகர்களில் இவருக்கு கொடுக்கலாம்.

சூரி, சந்தானம்  வரிசையில் உருவாகி  வருகிறார்  நக்கலைட்ஸ் அருண். மூன்று ஹீரோயின்கள் இருந்தாலும் கியூட்டாக்கவும், காதலை கண் முன் நிறுத்துவதும் கார்த்திகா முரளிதரன்தான். அம்மணியின் நடிப்பு சபாஷ் போட வைக்கிறது.

பாலசுப்பிரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு  ராகவ் இந்த மூவர் ஒளிப்பதிவில் கோவையின் அழகும், காதல் உணர்வுகளும் சிறப்பாக படம் பிடிக்கப்பட்டுள்ளன.  ஜீயோன் ஜேம்ஸின் இசையில் இனிமையை விட துள்ளல் அதிகம் உள்ளது.                              இன்றைய சம கால காதலை புரிந்து கொள்ள முயற்சி செய்பவர்கள் சபா நாயகன் ஒரு சாட்சி!                            

கடின உழைப்பே தன்னிறைவான வாழ்க்கைக்கு வழி!

70 வயதுக்குப் பிறகும் அறிவாற்றல், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது எப்படி?

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

SCROLL FOR NEXT