சம கால காதல் : இன்றைய கார்ப்பரேட் உலகில் ஆண் பெண் உறவுகளில் ஏற்படும் மாற்றத்தையும், சிக்கல் களையும் மைய்யமாக கொண்டு உருவாகி உள்ளது பானி பூரி வெப் தொடர். இந்த தொடர் நாளை shortflix ஒ டி டி தளத்தில் வெளியாகிறது. பிரபல ஊடகவியளாளர் ஹலோ எ எம் பாலாஜி வேணுகோபால் இயக்கி உள்ளார். தொடரில் ஹீரோ லிங்காவின் பெயரான தாண்டாயுத பாணி யில் இருக்கும் பானியையும், ஹீரோயின் சாம்பிகாவின் பெயரான பூர்ணிமாவின் பெயரில் இருந்து பூரியையும் எடுத்து பானி பூரி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பூரி (சாம்பிகா) சென்னையில் இருக்கும் ஒரு மென் பொருள் கம்பெனியில் ரோபோட்டிஸ் துறையில் விஞ்ஞானியாக இருக்கிறார். கோவையில் இருக்கும் பானியும் (லிங்கா ) பூரியும் காதலர்கள். திருமணம் செய்து கொள்ள முடிவு எடுக்கும் போது காதல் என்பது வேறு திருமணம் என்பது வேறு, திருமணதிற்கு முன்பு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள ஒரு வீட்டில் இருவரும் ஏழு நாட்கள் தங்க முடிவு செய்து ஒரு சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்டில் தங்குகிறார்கள். அந்த அப்பார்ட்மெண்ட்டில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். திருமணத்திற்க்கு பிறகு பூரியின் அப்பாவை யார் பார்த்துக்கொள்வது என்ற பிரச்சனையில் இருவரும் பிரிந்து விடுகிறார்கள்.முடிவு நாம் எதிர்பார்க்காத வகையில் உள்ளது. இன்று கை நிறைய சம்பளம் வாங்கும் வீட்டிற்க்கு ஒரே மகனாகவோ, மகளாகவோ இருக்கும் இளைஞர்களின் உணர்வை பிரதிபலிப்பதாக பானி பூரி உள்ளது. ஒரு நூலிழை தப்பினாலும் ஆபாசம் ஆகி விடும் கதையில் எந்த வித விரசமும் இல்லாமல் தந்திருக் கிறார் பாலாஜி. ஒரே வீட்டில் இருந்தாலும் கண்ணியமாக இருக்க முடியும் என்று சொன்னதற்கே டைரக்டருக்கு ஒரு சபாஷ் போடலாம். கடந்த இருபது ஆண்டுகளில் அதிகரித்து வரும் ஒற்றை பெற்றோர் (single parent) கலாச்சாரம் பற்றி பேசி உள்ளது இந்த தொடர். கார்ப்பரேட் கலாச்சாரத் தின் நீட்சியாக, நடுத்தர குடும்பங்களில் அதிகரித்து வரும் விவாகரத்தின் காரணங்களை சொல்லியிருகிறார் இயக்குநர். லிங்காவும், சாம்பிகாவும் ஒரு இயல்பான சம கால காதலர்களை போல கண் முன் கொண்டு வந்து காட்டியுள்ளார்கள். ஈகோ, அன்பு, கோபம் என அனைத்தையும் கலந்து நல்ல நடிப்பை தந்துள்ளார்கள்.இளங்கோவன் குமரவேல் மீண்டும் மீண்டும் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்து வருகிறார். ஒரு விவாகரத்தான இளம் மகளின் அப்பாவாக வாழ்ந்து காட்டியுள்ளார். வினோத், கனிகா என அனைவரும் சரியான நடிப்பை தந்துள்ளார்கள். நவநீத்தின் இசை உணர்வுகளை சரியாக கடத்துகிறது. மாறி வரும் குடும்ப மதிப்பீடுகளை சரியாக ஒரு கால கண்ணாடி போல் காட்டியுள்ளது பானி பூரி தொடர். தமிழ் வெப் தொடர் வரலாற்றில் இந்த பானி பூரிக்கு முக்கிய இடம் உள்ளது.