Varun dhawan & Samantha 
வெள்ளித்திரை

சமந்தா நடித்த Citadel Honey Bunny சீரிஸ்... ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

பாரதி

ஹாலிவுட்டில் ரூஸோ பிரதர்ஸ் தயாரிப்பில் பிரியங்கா சோப்ரா மற்றும் சில ஹாலிவுட் நடிகர்கள் நடிப்பில் வெளியான சிட்டாடல் சீரிஸின் தலைப்பில் இந்தியன் சீரிஸ் உருவாகி வருகிறது. இந்த சீரிஸில் வருண் தவான் மற்றும் சமந்தா இணைந்து ஸ்பை ஏஜென்ட்டுகளாக நடித்துள்ளனர். இந்தப் சீரிஸில் மிரட்டலான ஃபிரஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப்பெற்று வருகிறது.

ராஜ் & டிகே என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்கிய சிட்டாடல் சீரிஸின் போஸ்டரைப் படக்குழு ப்ரைம் வீடியோவில் வெளியிட்டது. போஸ்டரை வெளியிட்ட படக்குழு , “ சிட்டாடல் யுனிவர்ஸின் 'சிட்டாடல்: Honey Bunny' சீரிஸான இந்தியன் சீரியஸை ப்ரைம் வீடியோ உறுதிச்செய்துள்ளது. இது ஒரு விறுவிறுப்பான ஸ்பை த்ரில்லர் படமாகும். மேலும் இதில் மனதை உருக்கும் காதல் கதையையும் நீங்கள் பார்க்கலாம்.” என்றுப் பதிவிட்டிருந்தது.

மேலும் ஒரு மஞ்சள் நிற போஸ்டரில் சிட்டாடல்: Honey Bunny என்ற தலைப்பில், வருண் தவான் மற்றும் சமந்தா நேருக்கு நேர் துப்பாக்கியைப் பிடித்த ஸ்பை ஏஜென்ட்ஸ்களைப் போல போஸ்ட் இருந்தது. இப்படத்தில் கே கே மேனன், சிம்ரன், சோஹம் மஜுமதர், ஷிவன்கிட் பரிஹர், கஷ்வி மஜ்முந்தர், சிகந்தர் கேர் ஆகியோர் நடித்துள்ளனர்.

சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் ப்ரைம் வீடியோவில் ரூஸோவின் சிட்டாடல் சீரிஸ் வெளியானது. அதில் ரிச்சார்ட் மேடன் மற்றும் ப்ரியங்கா சோப்ரா இரண்டு ஸ்பை ஏஜென்ட்களாக நடித்திருந்தனர். அதன்பின்னர் இந்தியாவில் படக்குழு சிட்டாடல் படத்தைப் பற்றி அறிவித்தவுடன் இது ஒரு ரீமேக் படமா என்றக் கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன.

சமந்தாவின் ஒரு போஸ்ட்டில் ஒருவர் இது ரீமேக் படமா என்று கேட்டதற்கு, இது ரீமேக் படமில்லை என்று அவரே கூறிவிட்டார். ஆகையால் இந்தியன் சிட்டாடல் படம் ஹாலிவுட் படத்தைத் தழுவி இயக்குனரின் கற்பனைக் கலந்தப் படம் என்பது தெரியவருகிறது. இதேபோல் சிட்டாடல் படம் ரீமேக் அல்லாமல் இயக்குனர்களின் கற்பனை கலந்து ஸ்பெயின், இத்தாலி மற்றும் மெக்ஷிக்கோ ஆகிய நாடுகளிலும் உருவாகவுள்ளது என்ற செய்திகள் வெளியாகிவுள்ளன.  

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT