Kanguva Editor 
வெள்ளித்திரை

கங்குவா படத்தின் தொகுப்பாளர் மர்மமான முறையில் மரணம்!

பாரதி

பல தடைகளுக்கு பிறகு கங்குவா படம் ரிலீஸாகவுள்ள நிலையில், தற்போது கங்குவா படத்தின் தொகுப்பாளர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது சினிமா துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படம் பெரியளவு பொருட்செலவில் ஒரு வரலாற்றுக் கலந்த ஃபேண்டஸி படமாக உருவாகியிருக்கிறது. பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு பெரியளவு எதிர்பார்ப்புகள் உள்ளன. வெகுகாலமாக அப்போது வரும் இப்போது  வரும் என்று கங்குவா படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப் போய்க் கொண்டேதான் இருக்கின்றது. அந்தவகையில் கங்குவா படம் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தில் சூர்யாவிற்கு தமிழ் தவிர மற்ற அனைத்து மொழிகளுக்கும் ஏஐ குரல் பயன்படுத்தவுள்ளதாக செய்திகள் வந்தன. இப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில் கங்குவா படத்தின் எடிட்டர் நிஷாத் யூசப் இன்று அதிகாலை அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். நிஷாத் யூசூப் கொச்சி பனம்பிள்ளி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். காவல்துறையினர் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணங்களால் உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

43 வயதாகும் இவர் தமிழ் மற்றும் மலையாள சினிமா உலகில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2022ம் ஆண்டு தல்லுமாலா படத்துக்காக சிறந்த படத்தொகுப்பாளருக்கான மாநில விருது நிஷாத்துக்கு வழங்கப்பட்டது.

மேலும், உண்டா, ஒன், செளதி வெள்ளக்கா மற்றும் அடியோஸ் அமிகோஸ் உள்ளிட்ட பிரபல திரைப்படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

மேலும், சூர்யாவின் கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து, சூர்யா 45, மம்முட்டி மற்றும் மோகன்லால் நடிக்கும் திரைப்படங்களில் பணியாற்ற நிஷாத் ஒப்பந்தம் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கங்குவா படத்தின் கலை இயக்குநர் மிலன் உயிரிழந்த நிலையில், தற்போது படத்தொகுப்பாளரும் உயிரிழந்துள்ளது படக்குழுவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சினிமா துறையில் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கடிகாரங்கள் காட்டும் 10 மணி 10 நிமிடம் - தத்துவம் என்ன?

இரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கும் 5 பானங்கள்!

தமிழ்நாட்டைத் துருக்கியாக்கி, கேரளாவை ஈராக்காக்கி... என்னங்கடா சொல்லவறீங்க?

ஒரே கனவு இருவருக்கு வேறு வேறு பலன்களைத் தருவது ஏன்?

வீழ்ச்சியடைந்து வரும் ஆந்திரப் பிரதேச மாநில கொண்டபள்ளி பொம்மைகள்... கலை காப்பாற்றப்படுமா?

SCROLL FOR NEXT