வெள்ளித்திரை

ஆரம்பிக்கலாமுங்களா... 'மருதநாயகம்' படத்தின் புதிய அப்டேட்! இயக்குநர் இவர்தான்... ஆனா புது ஹீரோ!

மணிகண்டன்

கலைத்துறையில் தனது நடிப்பால் மட்டுமல்ல சிறந்த இயக்குநராக, எழுத்தாளராக, பாடகராக, தயாரிப்பாளராக என அனைத்துறையிலும் தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்து இன்றளவும் அனைவராலும் கவரப்படுபவர் கமல்ஹாசன்.

குழந்தையாக இருக்கும்போதே களத்தூர் கண்ணம்மாவில் தடம் பதித்து, இன்று விக்ரமாக வளர்ந்து அனைவரையும் பிரமிக்க வைத்து வருபவர். தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் தனது மாறுபட்ட கதாபாத்திரத்தாலும், நடிப்பாலும் அனைவராலும் கவரப்பட்டு வருகிறார்.

இவர் இயக்கிய 'ஹே ராம்', 'விருமாண்டி', 'விஸ்வரூபம்' திரைப்படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. திரையுலகில் பல்வேறு புதுமையை நிகழ்த்திப் பார்க்கும் திறம்படைத்த கமல்ஹாசன் 1997ல் 'மருதநாயகம்' என்னும் பிரம்மாண்ட திரைப்படத்தை எடுக்க முனைந்தார்.

அதைத் தொடர்ந்து, இப்படத்தின் தொடக்கவிழாவும் 1997ல் நடைபெற்றது. கமல்ஹாசன் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் அவ்விழாவில் கலந்துகொண்டார். அப்போது சில கோடியில் படமாக்கப்பட்ட 'மருதநாயகம்' படத்தின் சண்டைக்காட்சி அவருக்கு போட்டுக் காண்பித்ததாகவும் சொல்லப்பட்டது.

படத்தின் 30 சதவீத படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், சில பல பிரச்சனைகள் காரணமாக, அப்படம் எடுக்கப்படாமல், அப்படியே நின்றுபோனது.

பல வருடங்கள் கழிந்தாலும், மருதநாயகத்தின் தாக்கம் இன்றும் குறையாமல், படம் மீண்டும் துவங்கப்பட்டு எப்போது வெளிவரும்? என்ற ஏக்கம் இன்றளவும் ரசிகர்களிடையே அதிகரித்துதான் வந்தது. இதனிடையே, சமீபத்தில், கமல்ஹாசன் அளித்திருந்த பேட்டி ஒன்றில், விரைவில் 'மருதநாயகம்' துவங்கும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அதற்கான வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆனால் இப்படத்தில் கமல்ஹாசன் நடிக்கமாட்டார் எனத் தெரிகிறது. இப்படத்தை கமல்ஹாசன் இயக்க மட்டும் செய்வார் எனவும், இப்படத்தில் சூர்யா அல்லது விக்ரம் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மூச்சரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT