வெள்ளித்திரை

பள்ளியில் ஒளிபரப்பப்பட்ட சினிமா!

எம்.கோதண்டபாணி

ல்ல சினிமாவை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் விதமாக பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக தமிழக அரசுப் பள்ளியான சென்னை, விருகம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளில் மாதந்தோறும் சிறந்த திரைப்படங்கள் ஒளிபரப்படுகின்றன. அந்த வகையில் இன்று (14.11.2022) ‘குப்பச்சிக்களு’ என்ற கன்னடத் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்நிகழ்வுக்கு சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் S.மார்ஸ் மற்றும் நேர்முக உதவியாளர் ஸ்ரீபிரியா மற்றும் ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை கா.வாசுகி அவர்கள் முன்னிலையில் இந்தத் திரைப்படம் திரையிடப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் சீனு ராமசாமி, “வாழ்வுக்கு நெருக்கமான யதார்த்த சினிமா, குழந்தைகள் விழிப்புணர்வு சினிமா என நம்மை ரசனையில் மேம்பட வைக்கும் சினிமா கலையை மாணவர்களுக்கு அடையாளம் காட்டும் விதமாக இயக்குநர் பாலுமகேந்திரா அவர்கள் சினிமா ரசனைக் கல்வியை தொடங்க வேண்டுமென தன் வாழ்நாளெல்லாம் வலியுறுத்தி வந்தார். நானும், நாங்களும் இக்கருத்தினை வலியுறுத்தினோம். இன்று அது நனவானது.

சினிமா வாயிலாகக் குழந்தைகளை, ஆளுமைத் திறன் மிக்கவர்களாகத் திகழ வைக்கும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு என் ஆயுட்காலம் முழுவதும் தமிழக அரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து பணியாற்றுவேன் என என் விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இது சார்ந்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கும் தமிழக பாடநூல் கழக தலைவர் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

நம் இந்தியாவில் சாதனையாளர்களுக்கு என்னென்ன விருதுகள் வழங்கப்படுகின்றன?

எம்.ஜி.ஆர்- ஐ புரட்சித் தலைவர் என கூறுவது சரியா? - இயக்குனர் அமீர் ஆவேசம்!

கோடிக்கணக்கில் முடக்கப்படும் WhatsApp கணக்குகள்... என்ன காரணம்? 

கடன் கொடுத்துவிட்டு மிரட்டும் ஆன்லைன் செயலிகள்: வேண்டாம் இந்த விபரீதம்!

PBKS Vs RCB: பஞ்சாப் அணி தொடரிலிருந்து வெளியேறியது! பெங்களூரு அணி நிலை என்ன?

SCROLL FOR NEXT