வெள்ளித்திரை

ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட "ரைட்டிங் வித் ஃபயர்" ஆவணப் படத்துக்கு "Peabody" விருது!

கார்த்திகா வாசுதேவன்

இந்த பிரிவில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய ஆவணப்படமான ரைட்டிங் வித் ஃபயர் என்ற இந்திய ஆவணப்படம் மதிப்புமிக்க பீபாடி விருதை வென்றுள்ளது. பொதுவாக ஆன்லைன், வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியாகி மக்களிடையே வெகுவாக தாக்கத்தை ஏற்படத்தக் கூடிய கதைகளுக்கு இந்த பீபாடி விருது வழங்கப்படுகிறது.

ரைட்டிங் வித் ஃபயர் இயக்குனர்கள் ரிந்து தாமஸ் மற்றும் சுஷ்மித் கோஷ் இருவரும் தமது சமூக ஊடகப் பக்கங்களில் இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

ரிந்து தாமஸ், தமது டிவிட்டர் பக்கத்தில் “ஒரு பீபாடி விருது வீட்டிற்கு வருகிறது. நன்றி, நன்றி”. என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தாமஸ் இந்த இடுகையைப் பகிர்ந்தவுடன், அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க பலர் அவரது கருத்துகள் பிரிவில் குவிந்தனர்.

பலர் அவருக்குத் தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தபோது - அவர்களில் ஒருவராக திரைக்கதை எழுத்தாளரும் நகைச்சுவை நடிகருமான வருண் குரோவர் தமது கருத்தாக, “சான் பிரான்சிஸ்கோ திரைப்பட விழா நிகழ்ச்சி மூலம் ஆன்லைனில் நான் இந்த ஆவணப்படத்தைப் பார்த்தேன்... தகுதி மிகுந்த அந்த ஆவணப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது!” எனக் கருத்துரையிட்டிருந்தார்.

“ரைட்டிங் வித் ஃபயர்” ஆவணப் படமானது கபர் லஹரியா என்ற கிராமப்புற செய்தித்தாளை நடத்தி வரும் தலித் பெண்களின் குழுவைச் சுற்றி எழுதப்பட்ட கதைகளைக் கொண்டது. இது, தனது தனித்துவமான மற்றும் வளமான கதைசொல்லலுக்காக 2022 ஆம் ஆண்டில் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. வரையறுக்கப்பட்ட நிதி மற்றும் வேறு சில தடைகள் இருந்தபோதிலும் கூட, காகிதம் ஆட்சி செய்துக் கொண்டிருந்த அச்சுப் பதிப்பை வெற்றிகரமாக டிஜிட்டல் ஊடகத்திற்கு அந்தப் பெண்கள் எவ்வாறு மாற்றினர் என்பதைச் சொல்வதில் அந்த ஆவணப்படம் கவனம் செலுத்துகிறது.

இந்த மாற்றத்தின் போக்கில், பெண்கள் எதிர்கொள்ள வேண்டிய ஆணாதிக்கம் மற்றும் பாலின வன்முறை போன்ற பெரிய பிரச்சினைகளையும் இந்தப் படம் எடுத்துக்காட்டுகிறது.

திரைப்பட தயாரிப்பாளர்களுடனான உரையாடலில், பெண்ணிய ஐகானாகக் கருதப்படும் குளோரியா ஸ்டெய்னெம் இத்திரைப்படத்தைப் பாராட்டி, “இந்தியா எனது இரண்டாவது வீடு. கல்லூரி முடிந்து இரண்டு வருடங்கள் அங்கேயே வாழ்ந்தேன். நாங்கள் (அமெரிக்காவும் இந்தியாவும்) உலகின் இரண்டு பெரிய, பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயக நாடுகள். நாங்கள் ஒருவரை மற்றொருவர் சார்ந்தவர்களாக இருக்கிறோம், ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ள வேண்டும். அனல் பறக்க எழுதுவது என்பது "எல்லா வகைகளிலும் உண்மையை வெளிக்கொணர்வதற்கான ஒரு வெளிப்பாடு" என்று குறிப்பிட்ட அவர், நான் உயிரோடு இருந்த காலம் முழுவதும் எழுத்தறிவு என்பது பத்திரிகைத் தொழிலுக்கு ஒரு தடையாகவே இருந்தது என்பதை இத்திரைப்படம் தெளிவுபடுத்துகிறது.” என்றும் கூறி இருந்தார்.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT