நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் டோஃபுவின் ஆரோக்கிய நன்மைகள்!

Tofu
Tofu

டோஃபு என்பது பனீர் போன்ற  ஒரு உணவுப் பொருள் ஆகும். சோயா பீன் பாலின் தயிர் வடிவம்தான் டோஃபு என்று அழைக்கப்படுகிறது. சுமார் 2000 வருடங்களாக இந்த டோஃபுவை சீனர்கள் தங்களில் உணவில் பயன்படுத்தி வருகின்றனர். பல ஆசிய நாடுகளில் இது பிரதான உணவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

டோஃபுவில் கால்சியம், இரும்பு, மெக்னீசியம், காப்பர், வைட்டமின் ஏ, மாங்கனீஸ், புரதம் மற்றும் ஒன்பது அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளன. டோஃபு உட்கொள்வது, ட்ரைகிளிசரைடுகள் மற்றும் LDL எனப்படும் கெட்ட கொழுப்பை குறைப்பதோடு, HDL எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.

இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பதில் டோஃபு முக்கியப் பங்கு வகிக்கிறது. டோஃபுவில் உள்ள ஐசோஃப்ளேவோன்கள், சருமத்தில் ஏற்படுகின்ற சுருக்கங்கள், நுண்ணிய கோடுகள் மற்றும் கரும்புள்ளிகள் ஆகியவற்றைக் குறைக்க உதவுகின்றன.

இதிலுள்ள ப்ரோ பயாடிக் பண்புகள் உடலுக்கு நல்லது செய்யும் குடல் பாக்டிரியாக்களின் உற்பத்தியை அதிகரித்து, ஜீரண ஆற்றலை மேம்படுத்துவதோடு குடல் புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கிறது.

இதையும் படியுங்கள்:
நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசம்!
Tofu

பெண்கள் மாதவிடாய் நிற்கும் சமயத்தில், டோஃபுவை உணவில் சேர்த்துக் கொள்வது ஈஸ்ட்ரோஜன் அளவை பராமரிக்க உதவுகிறது. கால்சியத்தின் சிறந்த மூலமாக விளங்கும் டோஃபு, உடலில் எலும்புகள் மற்றும்  பற்களின் உறுதித் தன்மைக்கு முக்கியப் பங்காற்றுகிறது.

மூளை ஆரோக்கியம் மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் அமினோ அமிலங்கள் இதில் அதிகம் உள்ளன. இதை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்வதன் மூலம் நினைவாற்றல் அதிகரிக்கும். இதனால் ஞாபக மறதி பிரச்னை குறையும். இதில் அடங்கியுள்ள ஐசோஃப்ளேவோன்கள், பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் வராமல் தடுப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com