LIC Movie Team.
LIC Movie Team. 
வெள்ளித்திரை

பிரதீப் ரங்கநாதனின் புதுப் படம் ரசிகர்களை திருப்தி செய்யுமா?

சேலம் சுபா

2019ஆம் ஆண்டு வெளிவந்த "கோமாளி" படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்தான் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த அந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. கால மாற்றம் மற்றும் டெக்னாலஜி மாற்றம் மனித வாழ்க்கையை எப்படி மாற்றி வருகிறது எனும் மெசேஜை நகைச்சுவையுடன் தந்து பாராட்டு பெற்றார் பிரதீப் ரங்கநாதன்.

இதனையடுத்து சில வருட இடைவெளியில் பிரதீப் ரங்கநாதன் தான் இயக்கிய குறும்படத்தையே அடிப்படையாக்கி "லவ் டுடே" எனும் படத்தை இயக்கினார். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இவானா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இயக்குநரான பிரதீப் ரங்கநாதனே இதில் ஹீரோவாகவும் நடித்தார். இந்தப் படம் அவர் கதாநாயகனாக அறிமுகமாகிய முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. படம் திரையரங்குகளீல் 100 நாள்கள் ஓடி சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து தமிழ்த்திரையுலகில் கவனம் பெற்று முன்னணி நடிகராகவும் வளர்ந்துவரும் ஹீரோக்களில் ஒருவராகவும் இருக்கிறார்.

இதற்கிடையே லவ் டுடே படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டி சால்வை அணிவித்தார். அதுமட்டுமின்றி பிரதீப் ரங்கநாதனிடம் தனக்கு ஒரு கதை செய்ய ரஜினி சொன்னதாகவும் தகவல் பரவியது. மேலும் இந்தப் படமானது ஹிந்தியில் ரீமேக்காகிறது. இந்தக் காரணங்களினாலும் பிரதீப் ரங்கநாதன் ரொம்பவே பிரபலமாகிவிட்டார்.

மேலும் பல லட்சக்கணக்கான சந்தாதாரர்கள் கொண்ட யூடியூபராகவும் வலம் வருகிறார். தோற்றம், நடிப்பு, டயலாக் டெலிவிரி அனைத்திலும் எளிமையுடன் ரசிகர்களிடம் நண்பன் போல ஆகிவிட்ட பிரதீப் ரஙீகநாதனின் அடுத்த படம் எது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் எனலாம். தற்போது அவர் வெற்றிப்பட இயக்குநரான விக்னேஷ் சிவனின் இயக்கத்தில், எல்ஐசி (LIC) லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் எனும் படத்தில் நடித்துவருகிறார். விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்குவதால், இதன் கதை மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகின்றன. பிரதீப் ரங்கநாதன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்தப் படத்திலும் நிறைவேற்றுவாரா ? பொறுத்திருந்து பார்ப்போம்.

60 + வயது... அழகு நிலையம் செல்வது எதற்கு?

சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி சந்தோஷமாக வாழ்வோம்!

அப்பர் மிடில் கிளாஸ் மக்கள் இவங்கதானா?

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT