வெயில் காலத்தில் அணிவகுக்கும் எறும்புகளை விரட்டுவது ரொம்ப ஈஸிதாங்க!

It is very easy to repel ants that march in summer
It is very easy to repel ants that march in summer
Published on

கோடைக்காலம் வந்துவிட்டது. எறும்புகள் ஈரப்பதமான இடங்களை நோக்கி நகர ஆரம்பிக்கும். மழைக்காலத்தை விட கோடைக்காலங்களில் எறும்புகளின் தொல்லை அதிக அளவில் இருக்கும். இப்படி, குளிர்ச்சியான வீடுகளை நோக்கி படையெடுக்கும் எறும்புகளை எளிதாக விரட்ட சில பயனுள்ள ஆலோசனைகளைப் பார்ப்போம்.

எறும்புகளின் தொல்லை இல்லாத வீடுகளே இல்லை. மூலை முடுக்குகள், சுவற்றில் இருக்கும் ஓட்டைகள் என எந்த வழியிலாவது எறும்புகள் வந்துவிடும். குறிப்பாக வேர்கடலை போன்ற ஸ்நாக்ஸ் வகைகளை பாக்கெட் போட்டு வைத்தாலும், பாக்கெட்டை துளைத்துவிட்டு எல்லாவற்றையும் மொய்த்துவிடும். இதன் மூலம் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் எறும்பின் மூலமாக உணவில் பரவும்.

சில எறும்புகள் மனிதர்களைக் கடித்துவிடும். மற்றொரு புறம் கரையான்கள். இது கதவு, ஜன்னல் போன்ற மரக்கட்டை பொருட்களை அப்படியே அரித்துவிடும். இவ்வாறு நம்மைச் சுற்றிலும் 12 ஆயிரம் வகையான எறும்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

எறும்புத் தொல்லையில் இருந்து விடுபட…

1. சாக்பீஸ்: எறும்புகளை விரட்டுவதற்கு சாக்பீஸ்களைப் பயன்படுத்தலாம். வீட்டு வாசலில் இந்த சாக்பீஸைக் கொண்டு கோடு போடலாம். உணவு பாத்திரங்களை தரையில் வைத்தால், பாத்திரத்தைச் சுற்றிலும் தரையில் கோடு போடலாம். இது ஒரு நல்ல தீர்வாக அமையும்.

2. எலுமிச்சை: எலுமிச்சை வாடை எறும்புகளுக்குப் பிடிக்காது. எனவே, தரையை சுத்தம் செய்யும்போது, தண்ணீரில் சிறிது எலுமிச்சை சாறு ஊற்றி கலந்து, தரையைச் சுத்தம் செய்யலாம்.

3. ஆரஞ்சு: இதேபோல், ஆரஞ்சு வாடையும் எறும்புகளுக்குப் பிடிக்காது. ஒரு கப்பில் வெதுவெதப்பான நீரில் ஆரஞ்சு பழத்தோலை முக்கி, பேஸ்ட் போல செய்துகொள்ளவும். அதை எறும்பு வரும் இடங்களில் தெளிக்கலாம்.

4. மிளகு: எறும்புகளுக்கு இனிப்பு எவ்வளவு பிடிக்குமோ, அதற்கு நேர்மாறாக காரம் சுத்தமாகப் பிடிக்காது. குறிப்பாக, மிளகு இருந்தால் அந்த வாடைக்கு எறும்பு எட்டிக்கூட பார்க்காது.

இதையும் படியுங்கள்:
ஓம வாட்டர் தரும் ஒப்பற்ற நன்மைகள்!
It is very easy to repel ants that march in summer

5. உப்பு: இதேபோல், எறும்புத் தொல்லையில் இருந்து விடுபட உப்பைப் பயன்படுத்தலாம். கொதிக்க வைத்த தண்ணீரில், உப்பு சேர்த்து, நன்றாகக் கலக்கி, ஒரு ஸ்ப்ரே பாட்டில் மூலம் எறும்பு வரும் இடங்களில் தெளிக்கலாம்.

6. வெள்ளை வினிகர்: எறும்புகளுக்கு வினிகர் நறுமணம் ஆகாது. எறும்பு வரும் இடத்தில் வினிகரை சிறிதளவு ஊற்றினால் போதும். எறும்புத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

7. இலவங்க பட்டை: இலவங்கப் பட்டைத் தூளை வீட்டில் மூலை முடுக்குகளில் தூவினால்போதும். அந்த வாடைக்கு எறும்புகள் வராது.

8. துளசி: துளசியின் வாடைக்கும் எறும்புகள் வராது. வீட்டில் துளசி செடி இருந்தால், அதில் இரண்டு இலைகளை பிய்த்து, கையில் வைத்து கசக்கவும். பின்னர், அதை அப்படியே எறும்பு வரும் இடத்தில் போட, எறும்புகள் அந்தப் பக்கமே வராது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com