ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங் 
வெள்ளித்திரை

சூரியா பட நடிகைக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

விஜி

நடிகை ரகுல் ப்ரீத்சிங்கின் திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு கில்லி என்ற கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ரகுல் ப்ரீத் சிங். அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார். தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே உட்பட சில படங்களில் நடித்திருப்பவர், ரகுல் ப்ரீத் சிங். கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் நடித்துள்ள அவர், சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்திலும் நடித்துள்ளார்.

இதற்கிடையே ரகுல் ப்ரீத் சிங் விரைவில் திருமணம் செய்துக்கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வருடங்களாக பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியை காதலித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.

இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பக்னானியை ஜோடி வரும் பிப்ரவி மாதம் 22ஆம் தேதி திருமணம் செய்துக்கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களது திருமணம் கோவாவில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நேரம் எனும் நில்லாப் பயணி!

ஸ்வஸ்திக் வடிவ கிணறு பற்றி தெரியுமா உங்களுக்கு?

சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!

World Family Doctor Day: கொண்டாடப்பட வேண்டிய ஹீரோக்கள்! 

பெண்களே! உங்கள் முகத்திற்கு ஏற்ற பொட்டு எது?

SCROLL FOR NEXT