siva karthikeyan
siva karthikeyan  
வெள்ளித்திரை

சிவகார்த்திகேயனின் 'அயலான்'!

கல்கி டெஸ்க்

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த'பிரின்ஸ்' திரைப்படம் சரியாக ஓடவில்லை. ஆனால் அதற்கு முன்பு நடித்த 'டான்' திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது மட்டுமில்லாமல், பல தரப்பினரிடையே பாரட்டுதல்களையும் பெற்றது. தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் வரவிருக்கிறது.

‘இன்று நேற்று நாளை' படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ரவிக்குமார், அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய படம் அயலான். 2018ம் ஆண்டு ‘அயலான்' திரைப்படம் தொடங்கப்பட்டது.

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்தி சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர்நடிப்பில் ரவிக்குமார் இயக்கும் அயலான் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

Ayalaan

அயலான் படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில், பட்ஜெட் பிரச்சினையால்ஷூட்டிங்கை தொடர முடியாமல் போனது. சிவகார்த்திகேயனின் நெருங்கியநண்பரான ராஜா அயலான் படத்தை தயாரித்து வந்தார். ஆனால், பட்ஜெட்பிரச்சினையில் அவர் பாதியிலேயே விலகிவிட, கேஜிஆர் நிறுவனம் அயலான்படத்தை வாங்கியது. அதன்பின்னர் அயலான் ஷூட்டிங் வேகமாக நடைபெற்றாலும், கிராபிக்ஸ் பணிகள் மட்டும் தாமதமாகிக் கொண்டே போனது.

தற்போது அயலான் ரிலீஸ் தேதியை படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்வெளியானது. அதன்படி, இந்தப் படம் அடுத்தாண்டு மார்ச் 24 அல்லது 25ம் தேதிவெளியாகும் எனக் கூறப்படுகிறது. மார்ச் மாதம் அயலான் படத்தை களமிறக்க சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

அயலான் தான் தமிழில் முதல் ஏலியன்ஸ் திரைப்படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் ஏலியன்ஸாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகும் இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பது பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. அயலான் படத்திற்கு பின்னணி இசையமைக்கும் வேலைகளையும் ஏஆர் ரஹ்மான் தொடங்கி விட்டாராம். இந்நிலையில், அயலான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் டோஃபுவின் ஆரோக்கிய நன்மைகள்!

வயநாடு: ராகுல் ஜெயிப்பது நிச்சயமா?

அக்னி நட்சத்திரமும் மகாபாரத கதையும் தெரியுமா?

அக்னி நட்சத்திரம் காலத்தை சமாளிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா?

சமையலறையை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக மாற்ற 3 எளிய வழிகள்!

SCROLL FOR NEXT