விஜயின் தாய் ஷோபா தனது மகன் இந்த வேலைக்குதான் போக வேண்டும் என்று ஆசைப்பட்டோம். ஆனால், விஜயின் ஆசைப்படி அவனுக்குப் பிடித்த வேலையை செய்கிறான் என்று பேசியிருக்கிறார்.
விஜயகாந்த் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர் விஜய். முதலில் அவரின் முகத்திற்கும் நடிப்பிற்கும் நடனத்திற்கும் என அனைத்திற்கும் கேலி செய்யப்பட்டவர், கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை வளர்த்துக்கொண்டு கேலி செய்தவர்களே கொண்டாடும்படி மாறினார்.
இளையதளபதி முதல் தளபதி வரை முன்னேறினார். பிற்காலத்தில் விஜயா? அஜிதா? என்ற சண்டை வரும் அளவிற்கு ஒரு காலம் இருந்தது. பின்னர் இருவரின் படங்களும் குறைந்துக்கொண்டே வந்தன. ஆனால், அந்தப் படங்கள் வெளியாகும்போது ஒட்டுமொத்த தமிழகமும் கதிகலங்கும். இப்படி சினிமாவின் உச்சத்தில் இருந்த விஜய், இந்த வருடம் பிப்ரவரி மாதம் திடீரென்று அரசியலில் வருவதாக அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு முன்னரே இரண்டு வருடங்களாக பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை அழைத்து பரிசுகள் வழங்கினார். இதனையடுத்து அரசியல் என்ட்ரி குறித்து அறிவித்தார். பின்னர் கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவை அறிமுகப்பட்டுத்தப்பட்டன. இதனையடுத்து சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமாக மாநாடு நடைபெற்றது. லட்சக்கணக்கில் மக்கள் குவிந்தனர். விஜய் தான் ஒரு அரசியல்வாதி என்ற விஸ்வரூபத்தை எடுத்தார். பலரும் இதுகுறித்து விமர்சனம் செய்தார்கள்.
அந்தவகையில், விஜயின் அம்மாவான ஷோபா சந்திரசேகர் விஜயின் வளர்ச்சி குறித்து பேசியிருக்கிறார். " சிறு வயது முதல் விஜய், அவர் என்ன நினைக்கிறாரோ அதை கண்டிப்பாக செய்து முடிப்பார். பிடித்ததை அடைய என்ன தடைகள் வந்தாலும் சரி அதைப் பற்றி கவலை கொள்ள மாட்டார். அது தான் அவரது குணம். நானும் என் கணவரும் விஜய்யின் சிறு வயது முதல் அவரை டாக்டராக பார்க்க வேண்டும் என்று ஆசை கொண்டோம். ஆனால் விஜய் ஆக்டர் ஆக்டர் என்று கூறி நடிக்க வந்து விட்டார். தற்போது, அவர் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி சென்றுள்ளார். அதற்கு என் வாழ்த்துக்கள்" என்று பேசினார்.