Nobel Prize 
கலை / கலாச்சாரம்

நோபல் பரிசின் பின்னணி என்ன தெரியுமா?

ராதா ரமேஷ்

உலகில் வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருதாக போற்றப்படுவது நோபல் பரிசு. பதக்கம், சான்றிதழ் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் பரிசுத்தொகையுடன் வழங்கப்படும் இத்தகைய நோபல் பரிசின் பின்னணி என்ன? என்பதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

அமைதியின் தூதுவராகவும் நல்லிணக்கத்தை விரும்புவராகவும் அறியப்பட்ட ஆல்பிரட் நோபல் அடிப்படையில் ஒரு வேதியியலாளர். மேலும் இவர் பொறியாளர், ஆயுத தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். முதன்முதலாக டைனமைட் எனும் வெடிபொருளை கண்டுபிடித்த ஆல்பர்ட், சுமார் 350 க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளார். இவற்றில் பெரும்பாலானவை ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் ஆகும். இவர் கண்டுபிடித்த இத்தகைய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றதன் மூலமாக இவருக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைத்தது. ஆல்பர்ட் நோபலுடன் சேர்ந்து அவருடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள்.

இவரது சகோதரரான லித்விக் என்பவர் 1888 ஆம் ஆண்டு இறந்து விட பிரெஞ்சு செய்தித்தாள் ஒன்று ஆல்பிரட் நோபல் இறந்துவிட்டதாக செய்தி வெளியிட்டு விட்டது. நோபலின் சகோதரர் இறந்ததை நோபல் தான் இறந்தார் என தவறாக புரிந்து கொண்ட அந்த செய்தி நிறுவனம் 'மரண வியாபாரி இறப்பு' என்ற தலைப்பில் செய்தியை வெளியிட்டிருந்தது. இந்த செய்தியை பார்த்து நிலைகுலைந்து போன நோபல் மரணத்திற்கு பின்னும் தான் மதிக்கப்பட வேண்டும் என நினைத்து மனித குல முன்னேற்றத்திற்காகவும், சகோதரத்துவத்தை வலியுறுத்தி உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்காகவும் பாடுபடும் மனிதர்களை போற்றும் வகையில் அவர்களுக்கு பரிசளிக்கப்பட வேண்டும் என நினைத்து தனது சொத்துக்கள் முழுவதையும் நோபல் பரிசு வழங்குவதற்காக பயன்படுத்துமாறு உயில் எழுதி வைத்து விட்டு 1896 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அவர் இறந்ததற்குப் பின் 1900 ஆம் ஆண்டு நோபல் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. 1901 ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இயற்பியல், வேதியல், இலக்கியம், மருத்துவம், உயிரியல், அமைதி போன்ற பல்வேறு துறைகளில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 1969 ஆம் ஆண்டு முதல் இதில் பொருளாதாரமும் சேர்க்கப்பட்டு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஆல்பர்ட் நோபல் இறந்தபோது இதன் சொத்து மதிப்பு சுமார் இந்திய ரூபாயில் 1,780 கோடி ரூபாய் இருந்ததாகவும் தற்போது அதன் மதிப்பு சுமார் 4,000 கோடி ரூபாய் வரையிலும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதிலிருந்து தான் ஒவ்வொரு துறைக்கும் பரிசுகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு துறைக்கும் சுமார் 9 கோடி ரூபாய் வரை பரிசு தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் தொகை அறிவியல், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் அதிகபட்ச மூன்று பேர் வரை பிரித்து வழங்கப்படலாம். இலக்கியத்தில் மட்டும் ஒருவருக்கே முழுப் பரிசு தொகையும் கிடைக்கிறது. இவ்வாறு வழங்கப்படும் நோபல் பரிசு பதக்கம் தங்கத்தால் செய்யப்பட்ட சுமார் 6.6 சென்டிமீட்டர் விட்டம் கொண்டது. இதில் உள்ள தங்கம் சுமார் 200 கிராம் எடை கொண்டது. 1980 ஆம் ஆண்டு வரை 24 கேரட் தங்கமே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அதற்குப் பிறகு இது 18 கேரட் ஆக குறைக்கப்பட்டு இதன் எடையும் 175 கிராமாக குறைக்கப்பட்டது.

இவ்வாறு வழங்கப்படும் பதக்கத்தில் ஒருபுறம் ஆல்பர்ட் நோபலின் பக்கவாட்டு முகமும் மறுபுறம் வழங்கப்படும் துறைக்கு ஏற்ற உருவமும் பொறிக்கப்பட்டு இருக்கும். இயற்பியல் மற்றும் வேதியியல் பரிசு பதக்கத்தில் ஒரு பெண்ணாக உருவகப்படுத்தப்பட்ட இயற்கையின் முகத்திரையை, மற்றொரு பெண்ணாக உருவகப்படுத்தப்பட்ட அறிவியல் திறப்பது போன்று உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்துறையில் ஒரு பெண்ணாக உருவகப்படுத்தப்பட்ட மருத்துவத்தில், மற்றொரு தாகம் கொண்ட சிறுமி நின்று நீர் பிடிப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

இலக்கியத் துறையில் மருத மரத்தடியில் அமர்ந்திருக்கும் ஒரு இளைஞன் 'ம்யூஸ்' எனும் பெண் கடவுள் பாடும் வரிகளை தனது ஏட்டில் எழுதுவது போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அமைதிக்காக வழங்கப்படும் நோபல் பதக்கத்தில் மூன்று ஆண்கள் சகோதரத்துவத்துடன் அரவணைத்துக் கொண்டு இருப்பதைப் போலவும் அதில் 'மனித அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்காக' என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்திற்காக வழங்கப்படும் பதக்கத்தில் ஒரு மகுடம் மற்றும் நட்சத்திரம் பொறிக்கப்பட்டிருப்பதோடு அனைத்து பதக்கங்களிலும் பரிசை பெறுபவரின் பெயரும் சேர்த்து பொறிக்கப்படும்.

இதுவரை உலகில் சுமார் 800க்கும் மேற்பட்டவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு உள்ளது. இதில் மிக குறைந்த வயது முதல் அதிக வயது வரையிலான அனைவரும் அடங்குவர். மிகவும் குறைந்த வயதில் நோபல் பரிசு பெறுபவராக பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுஃப்சாய் என்ற 17 வயது சிறுமி இருக்கிறார். அதிக வயதில் நோபல் பரிசு பெறுபவராக ஜான் குட்இனஃப் என்று வேதியியல் ஆய்வாளர் இருக்கிறார். இவர் சார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் பேட்டரியை வடிவமைத்ததற்காக வேதியியல் துறையில் பரிசு பெற்றவர் ஆவார். இவ்வாறு வழங்கப்படும் நோபல் பரிசுகளில் அமைதிக்காக வழங்கப்படும் நோபல் பரிசு மற்றும் ஆல்பர்ட் நோபல் இறந்த நாளான டிசம்பர் 10ஆம் தேதி வழங்கப்படுகிறது.

இந்திய அளவில் கற்பனைக்கெட்டாத அளவில் கல்விக் கட்டணம் வசூலிக்கும் 5 கல்விக் கூடங்கள்!

வாழ்க்கையில் வெற்றி பெற பின்பற்ற வேண்டிய 10 விதிகள்!

இந்தியாவில் அமைந்திருக்கும் மிகப்பெரிய விதை வங்கி!

News 5 – (18.10.2024) ‘பாகுபலி’ திரைப்படத்தின் 3ம் பாகம் தயாரிக்கத் திட்டம்!

சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த விஜய் டிவி புகழின் மகள்!

SCROLL FOR NEXT