Tamil 
கலை / கலாச்சாரம்

இந்தியாவைத் தவிர உலகில் வேறு எங்கு தமிழ் கற்பிக்கப்படுகிறது!

A.N.ராகுல்

பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ், உலகெங்கிலும் அனைவரையும் ஈர்க்கும் வளமான கலாச்சாரத்தையும், வரலாற்று முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. இந்தியாவிலும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முக்கியமாகப் பேசப்படும் தமிழ் மொழி, மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ், பிஜி மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளில் கணிசமாக பேசும் அளவிலான மக்களைக் கொண்டுள்ளது. கூடுதலாக, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் யுனைடெட் கிங்டமில் தமிழ் அங்கீகரிக்கப்பட்டு அனைவராலும் கற்பிக்கப்படுகிறது.

தமிழ் கற்பதற்கான தனித்துவ காரணங்கள்:

கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் இலக்கியம்: இந்தியாவை மட்டுமல்ல, உலகம் முழுவதையும் இணைக்கும் பழங்கால இலக்கியம், கலை மற்றும் தத்துவ நூல்கள் பற்றிய தனித்துவமான பார்வையை தமிழ் வழங்குகிறது. இதோடு தமிழ் மொழியின் வளமான இலக்கிய பாரம்பரியம், இரண்டாயிரமாண்டுகளுக்கு பழமையானது என்பதால், அதில் கொட்டி கிடக்கும் காவியக் கவிதைகள், ஆழ்ந்த தத்துவக் கட்டுரைகள், சமகால நாவல்கள் மற்றும் கவிதைகள் அனைத்திற்கும் தனி சிறப்புண்டு. இதனால் இலக்கியம் மற்றும் கவிதைகளை விரும்புவோருக்கு, தமிழின் பாரம்பரியம் மற்றும் அதன் படைப்பு மொழியை தாண்டி ஒரு நேர்த்தியான அனுபவத்தை அதை கற்பவர்களுக்கு வழங்குகிறது.

வரலாற்று முக்கியத்துவம்: தமிழை கற்பதால், மனித வரலாறு மற்றும் பண்டைய நாகரிகங்கள் பற்றிய நுண்ணறிவுகள் கிடைக்கின்றன. இதனால் உலகின் பழமையான மொழியாக தனிநபர்களை ஈர்த்து இணைத்துகொள்கிறது. இதற்கு உதாரணமாக வணிகம் பற்றிய புரிதலை உலகம் முழுக்க பரப்பியதே, தமிழுக்கான தனிச்சிறப்பு.

அறிவாற்றல் பயன்கள்: தமிழில் தேர்ச்சி பெறுவது என்பது, அதன் வளமான சொற்களஞ்சியம் மற்றும் தனித்துவமான இலக்கணத்துடன் மூளைக்கான அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. இந்த மனப் பயிற்சியானது சிக்கலைத் தீர்க்கும் திறன்களை வலுப்படுத்துகிறது மற்றும் மொழியின் பன்முகத்தன்மையை அனைவரிடம் ஊக்குவிக்கிறது.

இந்தியாவிற்கு அப்பால் தமிழ் பேசுபவர்களுக்கான வாய்ப்புகள் மற்றும் நன்மைகள்:

தொழில் வாய்ப்புகள்: வணிகம், கல்வித்துறை மற்றும் சர்வதேச உறவுகள் போன்ற பல்வேறு தொழில் துறைகளில் ஈடுபட தனி மனிதர்களுக்கு போட்டித் திறனை தமிழ் மொழியில் புலமை அளிக்கும். சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில், தமிழ் ஒரு அதிகாரப்பூர்வ அல்லது அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை மொழியாக உள்ளது. இதனால் கல்வி, ஊடகம் மற்றும் அரசு சேவைகளில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

உலகளாவிய சமூகம்: உலகில் 80 மில்லியனுக்கும் (8 கோடிக்கு) அதிகமானோர் பேசும் தமிழை கற்பதால் தனிநபரால் தொடர்புகளை இன்னொரு இடத்தில் சுலபமாக வளர்க்க முடியும் மற்றும் கலாச்சார பரிமாற்றங்களையும் மேம்படுத்த முடியும். குறிப்பாக தமிழ் பேசும் பகுதிகளில் பயணம் செய்பவர்களுக்கு மற்றும் அங்கு வேலை செய்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பண்பாட்டுப் பாதுகாப்பு: தமிழ் கற்றுக்கொள்வதன் மூலம், தனிநபர்கள் வளமான வரலாற்று மரபு கொண்ட ஒரு மொழியின் கலாச்சாரத்தை பாதுகாத்து மேம்படுத்துவதற்கு பங்களிக்கின்றன. இந்த முயற்சியால் எதிர்கால சந்ததியினருக்கு உணர்த்த தமிழ் பாரம்பரியத்தை பாதுகாக்க உதவுகிறது, மற்றும் நவீன உலகில் அதன் தொடர்ச்சியான உயிரோட்டத்தை உறுதி செய்கிறது.

இப்படி தமிழ்நாட்டை தாண்டி உலகம் முழுக்க அனைவராலும் கற்க தொடங்கியிருக்கும் காரணமே, அதன் பழமை மற்றும் பெருமைகளை உணர்ந்ததால்தான் இன்று உலகம் முழுக்க பல இடங்களில் கொண்டாடப்படுகிறது. இவ்வளவு வரலாற்று சிறப்புகளை கொண்ட இந்த மொழியை, அது தோன்றிய இடத்தில் இருப்பவர்கள் அதன் பெருமைகளை மெருகேற்றி அடுத்தடுத்து தலைமுறைகளுக்கு கொண்டு சேர்ப்பது அனைவரின் கடமையாகும்.

உங்கள் இரவு தூக்கத்தைக் கெடுக்கும் 8 விஷயங்கள் எவை தெரியுமா?

கருப்பு ஆப்பிள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அடிக்கடி ஜெல்லி மிட்டாய் சாப்பிடுபவரா நீங்க? போச்சு போங்க..! அப்போ உங்களுக்கும் இந்த விஷயம் தெரியாதா?

கதைகளை எங்கிருந்து எடுக்கலாம் – பாக்யராஜ் ஓபன் டாக்!

லெபனானிலிருந்த தென்கொரியர்களை விமானம் மூலம் மீட்ட தென்கொரியா அரசு!

SCROLL FOR NEXT