அழகு / ஃபேஷன்

மழை காலத்தில் பாதங்களை பாதுகாத்து பராமரிப்பது எப்படி?...

கோவீ.ராஜேந்திரன்

டல் நலத்தைப் போல பாதங்களையும் பேணிக் காக்கவேண்டும். பெரும்பாலானோர் தங்களின் பாதங்கள் தொடர்பான சுகாதாரத்தை மறந்துவிடுகிறார்கள். குறிப்பாக மழை காலத்தில் மழை நீரில் நடப்பதால் சிலருக்குப் பாதங்களில் சேற்றுப் புண் வர வாய்ப்புள்ளது. மழையின்போது நீரில் அனைத்தும் கலந்து வருவதால், அதில் நடக்கும்போது அவை நம் பாதங்களில் . பூஞ்சைத் தொற்றுக்களை ஏற்படுத்தும். 

மழை காலத்தில் நமது உடலில் அதிகம் பாதிக்கப்படுவது நம் பாதங்கள் தான். அந்த நேரத்தில் பாதங்களை பாதுகாப்புடன் வைத்திருக்க சில டிப்ஸ்...

டம்பை சோப் பயன்படுத்தி சுத்தம் செய்வது போல பாதங்களையும் கழுவ வேண்டும். கால் விரல்களுக்கு இடையில் நன்றாக துடைத்து ஈரம் இல்லாதபடி பார்த்துக்கொள்ளவேண்டும்.

விரல்களின் இடுக்குகளில் ஈரம் படிந்தால் கிருமிகள் வளர்ந்து துர்நாற்றம், பூஞ்சை போன்ற பல சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும். குறிப்பாக முதியோர் தங்களின் பாதங்களைப் பராமரிக்க சிரமப்படுவதால் பல நோய்களுக்கு ஆளாகின்றனர்.

ழை காலத்தில் காலணிகளைத் தேர்ந்தெடுக்கும்போது நல்ல காற்று சென்று வரும்படியான காலணிகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். கேன்வாஸ் மற்றும் காட்டன் காலணிகள் நல்லது. சிந்தடிக் மிதியடிகள் வேண்டாம். சரியான காலணிகளை அணியுங்கள் ஷூக்கள் போட்டு மழையில் நனையும் போதோ அல்லது மழை நீரில் நடக்கும் போதோ, ஷூக்களுக்குள் நீர் இறங்கி நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. 

எனவே மழைக் காலத்தில் ஷூக்கள் மற்றும் ஹை-ஹீல்ஸ் போடுவதைத் தவிருங்கள். மேலும் எளிதில் காலில் நீர் புகாத காலணிகளைப் பயன்படுத்துவது நலம். நீர்-எதிர்ப்பு காலணிகள் நடைமுறையில் உள்ளன. மழைக்கால துயரங்களை எதிர்த்துப் போராட உங்களுக்கு இது  உதவும்.

ழை காலத்தில் வெளியே சென்று வந்தால். பாதங்களை நன்கு கழுவி துடைத்து ஆன்டி பங்கஸ்  பவுடர்களை  பூசுங்கள். இதை காலணிகளின் உட்புறமும் போடுங்கள். வீடு திரும்பி, கால்களைக் கழுவிய கையோடு, காலணிகளையும் நன்றாக உலர வைக்கவும். அவை ஈரமாகவே இருந்தால் நோய்த் தொற்று ஏற்படும், ஜாக்கிரதை!

கால்களை சுத்தமாக வைத்திருப்பது போல, நம் காலணிகளைச் சுத்தமாக வைத்திருப்பதும் மிகவும் அவசியம். காலணிகளை அடிக்கடி மாற்றுங்கள். எக்ஸ்ட்ராவாக இரண்டு, மூன்று ஜோடி காலணிகளை வைத்துக்கொள்ளுங்கள். மழை காலத்தில் வாட்டர் புரூப் செருப்புகளை அணிவது நல்லது.

வெறும் காலுடன் நடக்காதீர்கள். கால்  நகங்களை வெட்டுங்கள் கால் நகங்களில் எப்போதும் அழுக்கு சேர்வது இயல்புதான். ஆனால் மழை நீரில் நடக்கும் போது, அந்த அழுக்கே பூஞ்சைத் தொற்றாக மாற வாய்ப்புண்டு. எனவே கால் நகங்களை வெட்டி விடவும். இதனால் அழுக்கு சேராது. நகம் இல்லாததால் கால்களைக் கழுவுவதும் எளிதாக இருக்கும்.

ரியான பராமரிப்பு இல்லாவிட்டால் பாதங்கள் காலபோக்கில் வரண்டு போனது போல் ஆகிவிடும்.  இதற்கு தேனையும்,தேங்காய் எண்ணெய் சம அளவு கலந்து பாதங்களின் அடியில் பூசி வர சொரசொரப்பான தன்மை மாறும்.மழை காலத்தில் பொது இடங்களில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

ழை காலத்தில் இரவு தூங்கும் முன் நெய்யை சூடாக்கி அதிக மஞ்சள் தூள் மற்றும் வேப்ப எண்ணெய் கலந்து தினமும் குதிகால் பகுதியில் பூசி வர மழை காலத்தில் உருவாகும் பித்த வெடிப்புகள் சரியாகும். மீண்டும் வராமல் தடுக்கும்.

பாதங்களில் பலவிதமான அழுத்த புள்ளிகள் உள்ளன. தினமும் ஐந்து நிமிடங்கள் கடுகு எண்ணெயை கொண்டு உங்கள் பாதங்களை மசாஜ் செய்யுங்கள். இதை செய்து வந்தால்  மன அழுத்தம் குறையும், நல்ல தூக்கம் வரும், உடல் பருமன் குறையும் . இதனை இரவு தூங்கும் முன் செய்து வர வேண்டும்.

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT