பெண்கள் தாங்கள் அழகாக தோன்றுவதற்கான வழி முறைகளை தெரிந்து கொள்ளுமுன் அழகு சாதனங்களின் வரலாற்றினை தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
பெண்களுக்கென்று அழகு சாதனங்கள் எத்தனையோ உள்ளது. இவை பல நாடுகளில் பற்பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
ஆங்கிலத்தில் 'காஸ்மடிக்ஸ்' என்று இவற்றை அழைப்பார்கள். 'காஸ்மடிக்ஸ்' என்ற சொல் கிரேக்க வார்த்தையில் இருந்து வந்தது இது.
இது முன்பு தமிழ் நாட்டில் ஒப்பனைக் கலையின் கீழ் வருபவை. பழைய தமிழ் ஒப்பனைக் கலை இன்று அழிந்துவிட்டது.
அத்தகைய ஒப்பனைக் கலையில் பற்பல வண்ணப் பூச்சுகள் இருந்ததாக அறியப்படுகிறது. இதில் மஞ்சளுக்கு முக்கிய இடம் உண்டு.
எகிப்து நாட்டில் பேரழகி கிளியோபாட்ராவும் நீரோ சக்கர வர்த்தி மனைவி சபீனாவும் கழுதை பாலில் குளித்து தங்கள் அழகைப் பேணிக் கொண்டது நம்மில் பலரும் அறிந்ததே
பழங்காலத்தில் எகிப்தியப் பெண்மணிகள் 'அலபாஸ்டர்' என்னும் வண்ணத் தட்டுக்களில் பல வண்ணங்களைக் குழைத்து முகத்தில் பூசிக் கொண்டார்களாம். இவற்றை இன்றும் லண்டன் மியூசியத்தில் காணலாம்.
இவை இன்றைக்கு 5000 வருடங்களுக்கு முன் புழக்கத்தில் இருந்தன. பல வகையான வாசனை ஜாடிகளை எகிப்தியப் பிரமிடுகளில் இருந்து கைப்பற்றி இதை அறிய முடிந்திருக்கிறது.
இன்றைக்கு 3000 வருடங்களுக்கு முன் காலமான துதங்காமன் என்ற எகிப்திய மன்னன் சமாதியில் இருந்து எடுக்கப்பட்ட வாசனை ஜாடியில் இருந்து இன்றும் நறுமணம் வீசுகிறது
அன்று தயாரிக்கப்பட்ட வாசனைப் பொருட்கள் வாதுமைப் பருப்பு ஆலிவ் எண்ணெய், மூலிகைகள், சாம்பிராணி, வெள்ளைப் போளம் போன்ற பல பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டன.
கண்ணடியை விடப் பளபளக்கும் அழகு சாதனம் ஒன்றை என்ற ஓவிட் என்ற ரோமன் கவிஞர் கண்டு பிடித்தார். இது பார்லி கீரை வகைகள், முட்டை, மான் கொம்பு, கோதுமை தேன் போன்ற பல பொருட்கள் இதற்குத் தேவை. இதை செய்யப் பல நாட்கள் ஆனதாம்.
காலன் என்ற ஒரு கிரேக்க டாக்டர் இப்போது நமது பெண் உபயோகிக்கும் கிரீம் போன்ற பல அழகு சாதனத்தை முதன் முதலாகக் கண்டு பிடித்தார்.
இங்கிலாந்து ராணி எலிசபெத் ஒரு புதுரக அழகு கிரீமைக் கண்டு பிடித்தாராம். ஒயினில் குளித்துத் தன்னழகைப் பெருக்கிக் கொண்டாராம் அவரது அக்கா மேரி
அழகு என்பது உடுத்தும் உடை, போடும் மேக்-அப்களால் மட்டும் முழுமை பெறுவதில்லை. சரியான உடலமைப்புதான் அழகுக்கு அடிப்படையாக அமைகிறது. அந்த உடலை ஆரோக்கியமான முறையில் வைத்து அழகைப் பேண சரியான விகிதத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் சத்துணவுகளும் அவசியமாகின்றன.