உணவு / சமையல்

ருசியான பிடி கருணைக் கிழங்கு பச்சடி செய்வது எப்படி?

ஜெயகாந்தி மகாதேவன்

தேவை:

பிடி கருணைக் கிழங்கு கால் கிலோ, கடுகு 1 டீஸ்பூன், கறிவேப்பிலை 1 இணுக்கு, இஞ்சி பூண்டு பேஸ்ட் 1½ டீஸ்பூன், பெரிய வெங்காயம் 2, தக்காளி 3, சிவப்பு மிளகாய்த் தூள் 1½ டீஸ்பூன்(அவரவர் டேஸ்டிற்கேற்பவும்) , மஞ்சள் தூள் ½ டீஸ்பூன், எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன், பெருஞ்சீரகம் 1டீஸ்பூன், தேங்காய் துருவல் அரை கப், உப்பு & தண்ணீர் தேவைக்கேற்ப.

செய்முறை:

கருணைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து, கைகளால் பிசைந்து வைத்துக்கொள்ளவும். தேங்காய்த் துருவலுடன் பெருஞ்சீரகத்தை சேர்த்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி கொரகொரப்பாக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கருவேப்பிலை போடவும்.

இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். வெங்காயம், தக்காளியை நறுக்கி சேர்க்கவும். தக்காளி மிருதுவானதும், உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி விடவும். பின், கிரேவி பதம் வரும் அளவு தண்ணீர் சேர்த்து, கொதி வரும்போது, பிசைந்து வைத்துள்ள கிழங்கை சேர்த்து நன்கு கலந்து விடவும். கடைசியா தேங்காய்பூ கலவையை சேர்த்து கலந்து இறக்கவும்.

மல்லி தழை தூவி அலங்கரிக்கவும். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளவும் அட்டகாசமான சைட்டிஷ்.

இந்தக் கிழங்கில் மூலத்தை குணமாக்கும் ஆற்றல் அதிகமாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்தது.

நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் டோஃபுவின் ஆரோக்கிய நன்மைகள்!

வயநாடு: ராகுல் ஜெயிப்பது நிச்சயமா?

அக்னி நட்சத்திரமும் மகாபாரத கதையும் தெரியுமா?

அக்னி நட்சத்திரம் காலத்தை சமாளிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா?

சமையலறையை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக மாற்ற 3 எளிய வழிகள்!

SCROLL FOR NEXT