Samayal tips Image credit - youtube.com
உணவு / சமையல்

சூப்பரான சுவையில் தாகி பிந்தி மற்றும் அப்பளக்கூட்டு செய்யலாம் வாங்க!

நான்சி மலர்

ன்றைக்கு சூப்பர் டேஸ்டான தாகி பிந்தி மற்றும் அப்பளக்கூட்டு ரெசிபிஸை சுலபமாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.

தாகி பிந்தி செய்ய தேவையான பொருட்கள்;

வெண்டைக்காய்-5

எண்ணெய்-1 குழிக்கரண்டி.

சீரகம்-1/2 தேக்கரண்டி.

கடுகு-1/2 தேக்கரண்டி.

பிரிஞ்சி இலை-1

வெங்காயம்-2

இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.

சீரகத்தூள்-1/2 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

மஞ்சள் தூள்-1/2 தேக்கரண்டி.

தனியா தூள்-2 தேக்கரண்டி.

கரம் மசாலா-1 தேக்கரண்டி.

கருவேப்பிலை-1 கொத்து.

தயிர்-1 கப்.

உப்பு-1 தேக்கரண்டி.

கொத்தமல்லி-சிறிதளவு.

தாகி பிந்தி செய்முறை விளக்கம்;

முதலில் கடாயில் 1 குழிக்கரண்டி எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெண்டைக்காய் 5 சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது கடாயில் மறுபடியும் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சீரகம் ½ தேக்கரண்டி, பிரிஞ்சி இலை 1, கடுகு ½ தேக்கரண்டி சேர்த்து பொரித்துவிட்டு அரைத்த வெங்காயம் 2, இஞ்சிபூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.

இப்போது இதில் ½ தேக்கரண்டி சீரகத்தூள், ½ தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 2 தேக்கரண்டி தனியா தூள், கரம் மசாலா 1 தேக்கரண்டி, 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இத்துடன் 1 கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் எண்ணெய் பிரிந்து வந்ததும் 1 கப் தயிரை சேர்த்து அத்துடன் ¼ கப் தண்ணீர் சேர்த்து கலந்து விட்டுக்கொள்ளவும்.

இப்போது வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயை சேர்த்து வேகவிடவும். நன்றாக எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கிவிடவும். அவ்வளவு தான். சுவையான தாகி பிந்தி தயார். நீங்களும் இந்த சிம்பிள் ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

அப்பளக்கூட்டு செய்ய தேவையான பொருட்கள்;

எண்ணெய்-1 குழிக்கரண்டி.

வெங்காயம்-1

பச்சை மிளகாய்-4

கருவேப்பிலை-1 கொத்து.

இஞ்சிபூண்டு பேஸ்ட்- 1 தேக்கரண்டி.

தக்காளி-1

குழம்பு தூள்-3 தேக்கரண்டி.

தேங்காய்-2 கைப்பிடி.

சோம்பு-1 தேக்கரண்டி.

கடலைப்பருப்பு-1 கப்.

உருளை-2

உப்பு-1 தேக்கரண்டி.

தண்ணீர்-2 கப்.

அப்பளம்-15.

தாளிக்க,

எண்ணெய்-1 தேக்கரண்டி.

கடுகு-1/2 தேக்கரண்டி.

சீரகம்-1/2 தேக்கரண்டி.

உளுந்து-1/2 தேக்கரண்டி.

பூண்டு-4

கருவேப்பிலை-1 சிறிதளவு.

வரமிளகாய்-2

கொத்தமல்லி-சிறிதளவு.

அப்பளக்கூட்டு செய்முறை விளக்கம்;

முதலில் கடாயில் 1 குழிக்கரண்டி எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 4, கருவேப்பிலை 1 கொத்து, இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி, நறுக்கிய தக்காளி 1 சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.

இப்போது குழம்பு தூள் 3 தேக்கரண்டி, தேங்காய் 2 கைப்பிடி, சோம்பு 1 தேக்கரண்டி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து இதில் சேர்த்துவிடவும்.

இப்போது இத்துடன் வேகவைத்து 1 கப் கடலைப்பருப்பு, வேக வைத்த 2 உருளையை நசுக்கி சேர்த்துக் கொள்ளவும். இதையெல்லாம் நன்றாக கலந்துவிட்டு 1 தேக்கரண்டி உப்பு சேர்த்துவிட்டு 2 கப் தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும்.

இப்போது அப்பளம் 15 நொறுக்கி இதில் சேர்த்து கிண்டவும். இப்போது தாளிக்க 1 தேக்கரண்டி எண்ணெய், கடுகு ½ தேக்கரண்டி, ½ தேக்கரண்டி சீரகம், வரமிளகாய் 2, கருவேப்பிலை சிறிதளவு, பூண்டு 4, உளுந்து ½ தேக்கரண்டி சேர்த்து வதக்கி இதால் சேர்த்துக்கொள்ளவும். கடைசியாக கொத்தமல்லி சிறிதளவு தூவி இறக்கவும். அவ்வளவு தான் சூப்பர் டேஸ்டான அப்பளக்கூட்டு தயார். நீங்களும் வீட்டிலே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.

கலக்கலான தேங்காய்ப் பால் சாதமும், கவுனி தோசையும்!

சமூக வலைதளங்களில் அதிகரிக்கும் வெறுப்பு பதிவுகள்...

WhatsApp அழைப்புகளை ரெக்கார்ட் செய்ய முடியலையா? இந்த ட்ரிக்ஸ் பயன்படுத்துங்க!

மன அழுத்தப் பிரச்னையைப் போக்கும் 5 உணவுகள்!

குழந்தைகளோடு குழந்தையாய் பழகி மகிழ்ந்த குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா!

SCROLL FOR NEXT