கோல் போண்டா Image credit - youtube.com
உணவு / சமையல்

ஸ்பெஷல் கோதுமை ரவா கோல் போண்டா!

மும்பை மீனலதா

ங்கள் குழந்தைகளுக்கு பிடித்தவாறு வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் சுவையான மொறு மொறுவென கோதுமை போண்டா எப்படி செய்யலாம். இதோ இப்படி செஞ்சு கொடுங்க ஹாப்பியா சாப்பிடுவாங்க...

தேவையானவை:

நல்ல கெட்டித் தயிர். – 3 கப், சன்னமான கோதுமை ரவை (சுத்தம் செய்தது) - 2 கப், மிளகு – சீரகப்பொடி - 1 டீஸ்பூன், பெருங்காயப் பொடி – ¼ டீஸ்பூன், பச்சை மிளகாய் – 6,  இஞ்சி 1 துண்டு, ஃப்ரெஷ் கொத்தமல்லி இலை - 1 கப்,  ரீஃபைண்டு ஆயில் - ¼  லிட்டர், தேங்காய் எண்ணெய் - 2. டேபிள்ஸ்பூன், தேங்காய்த்துருவல் - 1 கப், உப்பு – தேவையானது.

செய்முறை:

* முதலில், கெட்டித் தயிரை ஒரு மெல்லிய துணியில் கட்டித் தொங்கவிடவும். தண்ணீர் வடிந்தபின், அதை சிறிது வாயகன்ற பாத்திரத்தில் விடவும்.

* பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய்த் துருவல், சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து தயிரில் சேர்க்கவும்.

* பின்னர் பெருங்காயப் பொடி, மிளகு - சீரகப் பொடி, கோதுமை ரவை, தேவையான உப்பு, கொத்தமல்லி இலை ஆகியவைகளையும் தயிரில் சோ்த்து, நன்கு மிக்ஸ் செய்து சுமார் பத்து நிமிடங்கள் வைக்கவும்.

* வாணலியில் ரீஃபைண்டு ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெயை விட்டு நன்றாகக் காயவிடவும். பிறகு தயார் செய்து வைத்திருக்கும் மாவை சிறுசிறு பந்து போல உருட்டி நாலு நாலாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வேகவைத்து இருபுறமும் திருப்பிப் போட்டு வெளியே எடுக்கவும்

* கமகம வாசனையுடனும் அருமையான சுவையுடன் இருக்கும். அத்துடன்,  இந்தக் கோல் போண்டாவிற்கு தொட்டுக்க சட்னி கூடத் தேவையில்லை. அனைவரும் அப்படியே விரும்பிச் சாப்பிடுவார்கள்.

உங்க பெண் குழந்தைக்கு இந்த உணவுகளைக் கட்டாயம் கொடுக்கவும்!  

நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைக்கவும் சுவாரஸ்யமாக மாற்றவும் யாரால் முடியும்?

உலகிலேயே விலையுயர்ந்த பாஸ்போர்ட் இதுதான்! இதன் விலை எவ்வளவு தெரியுமா?

காலிஃப்ளவர் சமைக்கும் முன் இதை செய்யத் தவறாதீர்கள்! 

பத்தே நிமிடத்தில் சுடச்சுட வெஜ் கட்லெட்டும், சோயா கட்லெட்டும் செய்வோமா?

SCROLL FOR NEXT