உறவுகளில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கும். இது ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிகமாகவே வெளிப்படும். அப்படி பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்க்கும் தரமான 5 விஷயங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. அறிவுப்பூர்வமான ஆண்: அறிவு சார்ந்து சிந்திக்கும் ஆண்களை, பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். அப்பேர்ப்பட்ட நபர்களுடன் ஒரு நாளை முழுவதுமாகச் செலவழித்தாலும் அவர்களுக்கு முழுமையாக இருக்காது. அதனை நன்றாக உணர்வார்கள். இன்னும் அவர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்று தோன்றும்.
2. சுதந்திரமாக இருத்தல்: தான் செய்யும் செயல்களுக்கும், தான் எடுக்கும் முடிவுகளுக்கும், தனது உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது போன்ற தானே முழு முதல் காரணமாக இருக்கும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். இது பெண்கள் மத்தியில் அப்படிப்பட்ட ஆண்களைப் பற்றி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.
3. தெளிவான இலக்கு: தெளிவான குறிக்கோளும் சரியான வழிகளும் வைத்திருக்கும் ஆண்களைப் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். அவர்கள் வைத்திருக்கும் இலக்கு பெண்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும். அந்த நம்பிக்கை அவர்கள் மீது நல்ல மதிப்பை ஏற்படுத்தி விரும்ப வைக்கும்.
4. நல்ல உரையாடல்: வழக்கமாக எல்லோரும் கேட்கும், 'சாப்டியா, தூங்கினியா' என்ற சலிப்பான உரையாடல்கள் இல்லாமல். கொஞ்சம் அர்த்தம் தரக்கூடிய உரையாடல்களை மேற்கொள்வது நல்லது. உதாரணமாக, இந்த நாள் உங்களுக்கு எப்படிச் சென்றது? ஏன் உங்களுக்கு அவ்வளவு பிடித்திருக்கும் என்று உள்ளார்ந்த கேள்விகள் கேட்கும் ஆண்களின் மீது பெண்களுக்கு தனிக் கவனம் ஏற்படும்.
5. மதிப்பளித்தல்: பெண்கள் தங்கள் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் மற்றும் அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியை ஆதரிக்கும் ஒரு ஆணை விரும்புகிறார்கள்.
ஒவ்வொரு பெண்ணின் விருப்பங்களும் மாறுபடும்போது, சில குணங்கள் உலகளவில் ஒரு துணையிடம் தேடப்படுகின்றன. உணர்ச்சி நுண்ணறிவு, ஒருமைப்பாடு, நம்பிக்கை, லட்சியம், நகைச்சுவை, மரியாதை, இணக்கம் மற்றும் ஆதரவு ஆகியவை ஆரோக்கியமான மற்றும் நிறைவான உறவுக்குப் பங்களிக்கும் முக்கியப் பண்புகளாகும். இந்த குணங்களைப் புரிந்துகொள்வதும் உள்ளடக்குவதும் ஆண்களுக்கு அவர்கள் விரும்பும் பெண்களுடன் அர்த்தமுள்ள தொடர்புகளை வளர்க்க உதவும். அத்தகைய பண்புடைய ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள்.