Dreams and benefits 
வீடு / குடும்பம்

பாம்பு உங்களைக் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நிகழும் தெரியுமா?

மகாலெட்சுமி சுப்ரமணியன்

னவுகள் அனைவருக்குமே பிடித்த ஒன்றாகும். ஏனெனில், நமது ஆழ்மனது ஆசைகள் பலவற்றை நமக்கு வரும் கனவுகள் பிரதிபலிக்கும். சிலசமயம் கனவுகள் நமது எதிர்காலத்தையும் கூட முன்கூட்டியே உணர்த்துவதாக இருக்கும். மாலை 6 முதல் 8 மணிக்குள் கண்ட கனவு ஒரு வருடத்திலும், இரவு 8 முதல் 10 மணிக்குள் கண்ட கனவு 3 மாதத்திலும், இரவு 10.30 முதல் 1.30 மணிக்குள் காணும் கனவானது ஒரு மாதத்திலும், இரவு1.15 முதல் 3.30 மணிக்குள் காணும் கனவு 10 தினங்களிலும், விடியற்காலை 3 முதல் 6மணிக்குக் காணும் கனவு உடனே பலிக்கும் எனவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதேபோல், பகலில் காணும் கனவு பலிப்பதில்லை எனவும் சாஸ்திரம் கூறுகிறது. சில வகை கனவுகள் மற்றும் பலன்களைக் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

புளிய மரமோ, வேறு மரமோ நிறைய காய்த்திருப்பது போல கனவு கண்டால் அதிக வருமானம் சேரும். கிளை தொழில்கள் தொடங்க வாய்ப்புகள் உண்டு. அரச மரத்தை கனவில் கண்டால் அரச பதவி அனுகூலம் கிடைக்கும். அரசங்கத்தால் ஆதாயம் வரும். ஆலமரத்தை கனவில் கண்டால் நம்மை சார்ந்தவர்களுக்கு உடல்நலக் குறைவு  உண்டாகும். வேப்பமரம் கனவில் வந்தால் குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது. மாமரம் கனவில் வந்தால் கல்யாண வாய்ப்பு கைகூடும். பலா மரம் காய்த்திருப்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். நெல்லி மரம் கனவில் வந்தால் பணக் கவலை நீங்கும். வாழைமரம் குலை தள்ளியிருக்கக் கனவு கண்டால் குழந்தை பேறு கிட்டும் என கனவு சாஸ்திரம் கூறுகிறது.

எலுமிச்சம் பழத்தை கனவில் கண்டால் நல்லது. தனக்கு ஒருவர் அதைக் கொடுப்பது போல் கனவு கண்டால் தொழிலில் விருத்தி, சகல பாக்கியங்களும் பெருகும். பேனா அல்லது எழுதுகோலை கனவில் கண்டால் கடிதம் மூலமாக பொருள் வரவு, நற்செய்தி வரலாம். குருவிகள், பறவைகள், பூச்சி கூடு கட்டுவதாக கனவு வந்தால் திருமணம் கை கூடும். புத்திர பாக்கியத்தை அருளும். கழுதை, குதிரை கனவில் வந்தால் வழக்குகள் சாதகமாக முடியும்.

உயரத்திலிருந்து விழுவது போல் கனவு வந்தால் பணம், பாராட்டு கிடைக்கும். தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும். வேண்டுதல் ஏதோ செய்ய வேண்டியது உள்ளது என அறியலாம். இறந்தவர்களின் உடலை கனவில் கண்டால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பாம்பு கடிப்பது போல கனவு கண்டால் சீக்கிரம் திருமணம் நிகழும். தோஷ நிவர்த்திக்கு ஆலயம் சென்று வரலாம்.

நமக்கு ஆரோக்கியமான கனவு வர வேண்டுமெனில் தூங்கப் போகும் முன்பு ஒரு வாழைப்பழம், ஒரு டம்ளர் பால் குடித்து விட்டு படுக்கச் சென்றால் நிம்மதியான உறக்கம் வரும்.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT