பிளேட்லெட்ஸ் என்பது இரத்தம் உறைவதற்குத் தேவையான சிறிய இரத்த அணுக்கள் ஆகும். ஒருவருக்கு பிளேட்லெட் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அதிக இரத்தப்போக்கு, சிராய்ப்பு மற்றும் காயங்கள் ஏற்பட்டால் நோய்களில் இருந்து குணமாக நீண்ட நாட்கள் ஆகும். இயற்கையான முறையில் பிளேட்லெட்ஸ் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் உணவுகள் மற்றும் பழங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கோதுமைப்புல் (Wheatgrass): கோதுமைப் புல்லில் குளோரோபில் அதிகம் உள்ளதால் இது ஹீமோகுளோபினை ஒத்திருக்கிறது. கோதுமைப்புல் பிளேட்லெட்ஸ், சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை இயற்கை முறையில் அதிகரிக்க உதவுகிறது.
பூசணிக்காய்: அதிக அளவு வைட்டமின் ஏ பூசணிக்காயில் உள்ளதன் காரணமாக பிளேட்லெட் எண்ணிக்கையை இயற்கையாக அதிகரிக்க உதவும் சிறந்த உணவுகளில் ஒன்றாக இது உள்ளது. இந்தக் காய் எலும்பு மஜ்ஜையில் பிளேட்லெட் உற்பத்தியை தூண்டி புரத ஒழுங்குமுறைக்கு உதவுகிறது.
வைட்டமின் சி உணவுகள்: வைட்டமின் சி ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இதிலுள்ள ஃப்ரீரேடிக்கல் சேதத்திலிருந்து பிளேட்லெட்ஸ்களை பாதுகாக்கிறது. வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை தொடர்ந்து டயட்டில் சேர்த்துக்கொள்வது பிளேட்லெட்ஸ்களின் உற்பத்தியை அதிகரிக்கும். ஆரஞ்சு, கிவி, புரோக்கோலி, கீரை, எலுமிச்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
மாதுளை: மாதுளை விதைகள் பிளேட்லெட்ஸ்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்களாக செயல்படும் மற்றும் அழற்சியை குறைக்கும் ஊட்டச்சத்துக்கள் இவற்றில் நிறைந்துள்ளன.
மீன் எண்ணெய்: மீன் எண்ணெயில் அதிகமுள்ள புரதச்சத்து நிறைந்த டயட் இரத்தத்தில் உள்ள பிளேட்லெட்ஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுவதோடு குறைந்த பிளேட்லெட் அளவுகளுடன் தொடர்புடைய கோளாறுகள் ஏற்படுவதைத் தடுக்கிறது. எனவே, மீன்கள் மற்றும் மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்ஸ்களை எடுத்துகொள்ள நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
மேற்கண்ட ஐந்து வகை உணவுகளிலும் இயற்கையாகவே பிளேட்லெட்ஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளதால் இவற்றை முறையாகப் பயன்படுத்தி பலன் பெறுவோம்.