Health Benefits of Natural Herbs 
வீடு / குடும்பம்

ஆவாரை பூத்தால் சாவாரை கண்டதுண்டா?

கே.எஸ்.கிருஷ்ணவேனி

மது முன்னோர்கள் அக்காலத்தில் வாய்மொழியாய்ச் சொல்லி வந்த பல செய்திகள் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்வுக்கும் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன. நாம் உண்ணும் உணவே மருந்தாக அமைந்துள்ளது. ‘நொறுங்கித் தின்றால் நூறு வயது’ என்பார்கள். எனவே உண்ணும் உணவை சத்துள்ளதாகவும் ஆரோக்கியம் நிறைந்ததாகவும் தேர்ந்தெடுத்து உண்ணுதல் மிகவும் நல்லது. நமது உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வாக, இயற்கையாக நம்மைச் சுற்றி விளையும் காய்கறிகள், கீரைகள் மற்றும் மூலிகைகளை மருத்துவமாக விளக்கும் விதமாக அவர்கள் சொல்லிச் சென்றுள்ள சில முதுமொழிகளை இந்தப் பதிவில் காண்போம்.

1. வாதத்தை அடக்கும் முடக்கத்தான், 2. கோழைக்கு எதிர் தூதுவளை, 3. குடல் புண்ணை ஆற்றும் மணத்தக்காளி, 4. ஆசன வெடிப்புக்கு துத்திக் கீரை, 5. கிழங்குகளில் கருணை அன்றி வேறொன்றும் புசியாதே, 6. விடா ஜுரத்திற்கு விஷ்ணுக் கரந்தை, 7. மஞ்சள் காமாலைக்கு கரிசலாங்கண்ணி, 8. சிறுநீரை பெருக்கும் சிறுகீரை, 9. அனைத்து வியாதிகளுக்கும் அருகம்புல் சாறு. 10. ஆவாரை பூத்தால் சாவாரை கண்டதுண்டா?

11. வெங்காயம் உண்பார்க்கு தன் காயம் பழுதில்லை, 12. வாழை வாழ வைக்கும், 13. முருங்கைக்காய் என்றதும் முறிந்ததாம் பத்தியம், 14. சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை, 15. ஓரிதழ் தாமரை உண்ண பலன் உண்டாம். 16. காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு மாலையில் கடுக்காய், 17. பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.

18. பொன்னாங்கண்ணி மேனியை பொன்னாக்கும், 19. மாதா ஊட்டாத சோறை மாங்காய் ஊட்டி விடும், 20. சித்தம் தெளிய வில்வம், ஜீரணத்துக்கு சுண்டைக்காய். உஷ்ணம் தவிர்க்க கம்பங்களி.

இப்படி நமது முன்னோர்கள் உணவைப் பற்றியும், அது தீர்க்கும் நோயைப் பற்றியும் நிறைய கூறிச் சென்றுள்ளனர். முடிந்தவரை அவற்றைப் பின்பற்றி நலமுடன் வாழ்வோமே.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT