* மழை பெய்யும் இந்த சீசனில், சரியாக செயல்படாத மின் விளக்குகள், சுவிட்சுகள், மின் சாதனங்களை முறையாகப் பழுது பார்த்தல் வேண்டும்.
* மின்சார வயரிங் வேலைகளை மழைக்கு முன்னரே செய்து விட வேண்டும். திடீரென பழுதுபடும் மின் சாதனங்களை முறையாக அங்கீகாரம் பெற்ற அல்லது நன்கு வேலை தெரிந்த எலெக்டீஷியனைக் கொண்டே செய்ய வேண்டும்.
* ஸ்விட்சுகள், மின்விசிறி என எந்த மின் சாதனங்களுக்கும் ஐ.எஸ்.ஐ. முத்திரை உள்ளதா என சரிபார்த்து அதை மட்டுமே வாங்க வேண்டும். விலை சற்று கூடுதலாக இருந்தாலும் தரமான கம்பெனி பொருட்களையே வாங்க வேண்டும்.
* மின்சார பிளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும் எடுப்பதற்கு முன்பும் சுவிட்சை அணைத்து விட வேண்டும்.
* உடைந்த ஸ்விட்சுகள், பிளக்குகளை உடனே மாற்றுவதோடு, அதில் ஒட்டோ, பிளாஸ்டர்ஸ் போட்டு உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
* கேபிள் டிவி ஒயர்களை மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லக் கூடாது. ஸ்விட்சுகள், பிளக்குகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.
* வீட்டு ஒயரிங்குகளை அவ்வப்போது சரிபார்ப்பது தேவையெனில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி விடுங்கள்.
* மின்சார கம்பத்துக்காகப் போடப்பட்ட ஸ்டே வயரின் மீதோ அல்லது மின் கம்பத்தில் மீதோ கொடி கட்டி துணி காயப் போடுவதை கண்டிப்பாகச் செய்யக்கூடாது.
* கால்நடைகளை கட்டுவதையும் அதன் மீது விளம்பர பலகைகளை கட்டுவதையும் தவிர்க்க வேண்டும்.
* மழைக்காலத்தில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள், ஸ்டே வயர்கள் ஆகியவற்றின் அருகே செல்லாதீர்கள்.
* மழை, காற்றால் மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது எனில் அதன் அருகே செல்வதோ, அதை எடுக்க முயற்சிப்பதோ கூடாது. மின்சார அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிவிப்பது அவசியம்.
* வீட்டுக்கருகில் மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் வளர்ந்திருக்கும் நம் வீட்டின் மரக்கிளைகளையோ, செடிகளையோ நாமே வெட்ட முயற்சிக்கக் கூடாது.
* பழைய மின் சாதனங்கள், கிரைண்டர், அயர்ன் பாக்ஸ் உபயோகிக்கும்போது காலில் ரப்பர் செருப்பு அணிந்து கொண்டு செய்வது நல்லது.
* மழை, இடி உள்ள சமயங்களில் செல்போன் உபயோகிப்பதையும், சார்ஜ் போடுவதையும் தவிர்க்க வேண்டும். அச்சமயம் ஏசி, வாட்டர் ஹீட்டர் ஸ்விட்சுகள் இயக்காமல் இருப்பது நல்லது.
இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மழைக்காலத்திலும் பாதுகாப்பாக இருக்கலாம்.