Words spoken by wife that hurt husband's heart 
வீடு / குடும்பம்

கணவன் மனதை காயப்படுத்தும் மனைவி பேசும் வார்த்தைகள்!

பொ.பாலாஜிகணேஷ்

றவுகளிலேயே கணவன் - மனைவி பந்தம் என்பது மிகப் புனிதமானது. நம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது. ஆனாலும், நாம் சில நேரங்களில் வீண் சண்டையிட்டுக் கொள்வோம். அப்பொழுது ஆத்திரத்தில் நாம் உதிர்க்கும் வார்த்தைகள் எவ்வளவு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை எப்போதாவது யோசித்ததுண்டா?

அதிலும் சிலர் என்ன பேசுகிறோம்? எப்படிப் பேசுகிறோம்? எதை பேசுகிறோம் என்று தெரியாமல் வார்த்தைகளைக் கொட்டி விடுவார்கள். கணவன், மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் வருவது சகஜம்தான். ஆனால், அப்படி வார்த்தைகளால் பேசும்பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் அதற்கான பலனையும் நாமே அனுபவிக்க வேண்டியது இருக்கும்.

சில வார்த்தைகளை கணவனிடம் சொல்லக் கூடாது. சொன்னால் நிச்சயம் அதை விரும்ப மாட்டார்கள். இதனால் நஷ்டம் உங்களுக்குத்தான். அப்படி அவை என்னென்ன வார்த்தைகள் என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

‘நான் வேறு யாரையாவது திருமணம் செய்திருந்தால், ராணியாக இருந்திருப்பேன்’ என்று நீங்கள் அடிக்கடி உங்கள் கணவரிடம் சொல்பவரென்றால், உடனடியாக அப்படிச் சொல்வதை நிறுத்துங்கள். இது உங்கள் உறவை மோசமாக்கும். குறிப்பாக, ஆண்கள் இதை விரும்பவே மாட்டார்கள்.

திருமணத்திற்குப் பிறகு ஒவ்வொரு பெண்ணும், மாமியார் மற்றும் கணவரைப் பற்றி தனது தாயிடம் சொல்வது வழக்கம். அந்தச் சூழ்நிலையில், உங்கள் கணவரின் நடத்தையை உங்கள் தாய் தவறாகப் பேசியிருந்தால், அதை நகைச்சுவையாகக் கூட கணவரிடம் சொல்லாதீர்கள்.

ஒவ்வொரு ஆணும் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்கவே முயற்சிக்கிறான். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ‘கடினமாக உழைத்தாலும் இதுவரை விலையுயர்ந்த பொருள் எதுவும் கொடுக்கவில்லை, ஏன் நல்ல ஒரு ஹோட்டலுக்கு கூட அழைத்துச் செல்லவில்லை’ என்று உங்கள் கணவரிடம் சொல்லாதீர்கள். இதனால் அவர் மனம் உடைந்து போவார்.

உங்களுக்கும் உங்கள் மாமியாருக்கும் இடையே உறவு மோசமாக இருந்தால், அதை உங்கள் கணவர் அல்லது உங்கள் குடும்பத்தாரிடம் சொல்வது தவறு. ஏனென்றால், யாரும் தங்கள் குடும்பத்தைப் பற்றிய கெட்ட விஷயங்களைக் கேட்க விரும்ப மாட்டார்கள். குறிப்பாக, நீங்கள் அடிக்கடி சொல்லும்போது. இந்த ஒரு விஷயம் உங்கள் உறவை அழிக்கக்கூடும்.

இல்லறம் நல்லறமாக மாற இனிய சொற்களைப் பேசுவோம். அதிலும் கோபத்தில் இருக்கும்பொழுது மனதில் தோன்றும் வார்த்தைகளை எல்லாம் பேசி நம் மனதையும் பிறர் மனதையும் காயப்படுத்த வேண்டாம். குடும்பம் என்பது ஒரு அழகான குருவிக்கூடு அது வார்த்தைகளால் அழிந்து விடக்கூடாது. குருவியை விட நாம் பார்த்து பார்த்து ஒரு குடும்பத்தை கட்டமைக்கிறோம். ஆனால், ஒரு சில வார்த்தைகளால் அது சிதைந்து போகிறது. அப்படி சிதைந்து போகாமல் இருக்க பேசும்போது சில வார்த்தைகளை தவிர்ப்பது நம் கையில்தானே இருக்கிறத

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT