People of achievement 
Motivation

பேரார்வம் தருமே பெரும் வெற்றி..!

சேலம் சுபா

ங்களின் கடந்த காலம் உங்கள் எதிர்காலம் அல்ல என்று நம்பிக்கை வையுங்கள். மரபுகளால் சார்ந்திருப்பதும் அது உங்களை வரையறுப்பதும் மட்டும் இல்லாமல் மற்றவர்கள் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதைக் கேட்காதீர்கள். உங்கள் முகத்தில் புன்னகையை வரவைக்கும் பிரகாசமானவற்றைக் கருத்தில் கொண்டு உங்களின்  பேரார்வத்தைக் கண்டுகொண்டு அதில் கவனம் குவியுங்கள்." -Gayle Carson.

வெற்றி பெற்ற சாதனை மனிதர்கள் தங்கள் கடந்த காலத்தின் சுவடுகளை மறந்து தங்கள் பேரார்வம் எதில் இருக்கிறதோ அதில் கவனம் கொண்டு அதை தேடி சென்றவர்களே.

காலங்கள் கடந்து விடக்கூடியவை எனும்போது அந்த காலங்களில் நடக்கும் சம்பவங்களும் கடந்து போவதே. கடந்த காலத்தில் ஏதேனும் ஒரு தோல்வி ஏற்பட்டால் அந்த தோல்வியை நினைத்து எதிர்காலத்திலும் தோல்விதான் என்று நினைத்து தேங்கிவிட்டால் நமது முன்னேற்றம் தடைபடும்.

அந்த தோல்வியை சுட்டிக்காட்டி உன்னால் முடியாது என்று எதிர்மறை எண்ணத்தை  தூண்டுபவர்களிடம் இருந்து விலகி இருப்பது முக்கியம்.  கடந்த கால மட்டுமே வாழ்க்கை அல்ல... கடந்த காலத்தின் அனுபவங்களை பெற்று எதிர்காலத்திற்கான முன்னேற்றத்தை அடைவதே வெற்றியின் அடையாளம்.

கடந்த காலம் எதை சார்ந்தும் இருக்கலாம். ஆனால் ஏதோ ஒன்றில் வரும் நமது ஆர்வம் இயல்பானது. ஒரு கட்டத்தில் அந்த ஆர்வம் நமக்கே நம்மை அடையாளம் காட்டி அதை நோக்கி நகர வைத்து விடும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அதே பேரார்வத்துடன் அதில் கவனம் வைத்து செயல்படுத்துவதுதான்.

சமீபத்தில் மறைந்த மிகப் பிரபலமான குணச்சித்திர நடிகர் தனது கடந்த காலத்தில் விமானப்படையில் பணியாற்றி நடிப்பின் மீதிருந்த பேரார்வத்தில் துணிச்சலாக தன் பணியை விட்டு விட்டு நடிப்பை பற்றிக் கொண்டவர். ஊர் விட்டு ஊர் வந்து தனது இலக்கில் கவனம் வைத்து சிறந்த கதாபாத்திரங்களை ஏற்று தனக்கென ஒரு அடையாளத்தை திரையுலகில் அழுத்தமாக பதித்தவர்.

இவரைப் போன்ற பல சாதனையாளர்கள் நம்மிடையே நமக்கு முன்மாதிரியாக வாழ்ந்து வருகின்றனர். மற்றவர்கள் என்ன சொல்வார்கள் எனும் எண்ணத்தை முளையிலேயே கிள்ளி விடுங்கள். உங்கள் உள்ளம் சொல்வதைக் கேளுங்கள்.

ராஜூ ஒரு வாரமாக பள்ளிக்கு வரவில்லை. ஆசிரியர் அவன் வீட்டுக்கு சென்றார். அது ஒரு குடிசைவீடுதான். அங்கு அவர் கண்ட காட்சி பிரமிக்க வைத்தது. ஆம். ராஜூவின் கைவண்ணத்தில் தத்ரூபமான ஓவியங்கள் அங்கு இருந்தன. ஓவியப் போட்டி ஒன்றில் கலந்து கொள்ளவே பள்ளிக்கு வரவில்லை என்று சொன்னவன் தனது ஓவிய ஆர்வத்தையும் அவரிடம் கூறினான். ஓவியங்கள் பற்றி பேசுகையில் ராஜூவின் முகத்தில் இருந்த பிரகாசத்தைக் கவனித்த ஆசிரியர் அவன் பெற்றோரிடம் உங்கள் மகன் பற்றி கவலை வேண்டாம். அவனின் பேரார்வம் அவனை ஜெயிக்க வைக்கும். போட்டி முடிந்ததும் பள்ளிக்கு வரட்டும் என்று சொல்லி சென்றார்.

ராஜூ தனது திறமையால் ஏழ்மையை கடந்த காலமாக மாற்றி எதிர்காலத்தில் வெற்றி பெறும் பேரார்வம் கொண்டு அதில் பயணிக்கிறான். நிச்சயம் அவன் ஜெயிப்பான். நாமும் பேரார்வம் கொண்டு நமது துறையில் இறங்கி வெற்றி பெறுவோம்.

கடிகாரங்கள் காட்டும் 10 மணி 10 நிமிடம் - தத்துவம் என்ன?

இரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கும் 5 பானங்கள்!

தமிழ்நாட்டைத் துருக்கியாக்கி, கேரளாவை ஈராக்காக்கி... என்னங்கடா சொல்லவறீங்க?

ஒரே கனவு இருவருக்கு வேறு வேறு பலன்களைத் தருவது ஏன்?

வீழ்ச்சியடைந்து வரும் ஆந்திரப் பிரதேச மாநில கொண்டபள்ளி பொம்மைகள்... கலை காப்பாற்றப்படுமா?

SCROLL FOR NEXT