Stress... Image credit - pixabay
Motivation

மன அழுத்தத்தை ஒழித்துக் கட்டுங்கள்!

இந்திரா கோபாலன்

வீன வாழ்க்கையில்  மன அழுத்தம் என்பது தவிர்க்க முடியாதது. வளர்ச்சி என்றாலே அதிக செல்வம் என்று நினைத்து விட்டதால் வந்த குழப்பம் இது. நிர்வாகம் என்றாலே அதைப் பொருளாதாரத்துடன் தொடர்பு படுத்தும் பழக்கத்தால் வந்த நிலை இது. யார் சிறந்த நிர்வாகியாக இருக்க முடியும்.  ஒரு வாகனத்தை ஓட்டுவது எப்படி என்பது தெரிந்தால்தானே, நீங்கள் அடுத்தவருக்கு  சொல்லித்தர முடியும். 

ஒருவர் தன் மகனை அழைத்தார். "நீ மேஜராகப் போகிறாய். எனக்குப் பின் நீதான் நிர்வாகத்தை கவனிக்க வேண்டும். ஒவ்வொன்றாகக்கற்றுக்கொள்" என்றார். மகனை க்ளப்புக்கு அழைத்துக் கொண்டு போனார். அங்கே எல்லோரும் மது அருந்திக் கொண்டிருந்தனர். பெரியவர் மதுவை எடுத்துக் கொண்டு  மகனிடம் ஒரு கோப்பையை கொடுத்து "பெரிய மனிதர்கள் காரியம் சாதித்துக் கொள்ளும் இடம் இது. மற்றவர்களைக் குடிக்கவிடு. நீ நிதானம் இழப்பதற்கு முன் குடிப்பதை நிறுத்திவிடு. இதுதான் முதல் பாடம் என்றார். பெரியவர் நன்றாகக் குடித்தார். 

அதற்கு முன் குடித்துப் பழக்கம் இல்லாத அவர் மகன் "நிதானம் இழந்து விட்டதை எப்படித் தெரிந்து கொள்வது?." என்று கேட்க, அவன் தந்தை பக்கத்து மேஜையைக் காட்டி "அங்கு உட்கார்ந்திருக்கும் நான்கு பேர்கள் உனக்கு 8 பேர்களாகத் தெரிந்தால், நீ நிதானம் இழந்துவிட்டாய் என்று அர்த்தம். அதற்கு மேல் ஒரு சொட்டு கூட குடிக்காதே" என்றார். மகன் பதறினார்.

மற்றவர்களை நிர்வகிக்கும் திறனை நீங்கள் முழுமையாகப்பெற வேண்டுமானால் அடிப்படையில் உங்களை அல்லவா நிர்வகிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பதவி உயர்வு கிடைக்கும்வரை போராடுவீர்கள். கிடைத்ததும் நிமிடத்துக்கு நிமிடம் டென்ஷன் என்கிறீர்கள். இன்னும் உயரே போனால் முன்பு நிம்மதியாக இருந்தேன். இப்போது அமைதியே போயிற்று என்பீர்களா?

வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு வசதிகளை பெருக்கிக் கொள்வது செத்த கிளிக்கு தங்கக் கூண்டு செய்து கொடுப்பதுபோல். தோல்வியால் உண்டான துன்பத்துக்காவது அர்த்தம் கற்பிக்கலாம். வெற்றியால் துன்பம் வந்தால், உங்கள் அடிப்படையிலேயே தவறு இருக்கிறது. 

நீங்கள் கடை நிலைத் தொழிலாளியானால் என்ன, கட்டுப்படுத்தும் முதலாளியானால் என்ன?. உங்களை நிர்வகித்துக் கொள்ளும்  முழுமையான திறனின்றி, நீங்கள் மேல் நிலைக்கு வர முனைந்தால், அது ஒரு விபத்தாகவே முடியும். வெளிச் சூழல்களால் பாதிக்கப்படாமல், உங்கள் உள் தன்மையை நிர்வகிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். சுற்றிலும் சகதியாக இருந்தாலும் அதையே உரமாகக் கொண்டு  தாமரை தன் அழகை வெளிப்படுத்துகிறது அல்லவா?. உங்கள் வாழ்க்கையும் அப்படித்தான் அமையவேண்டும். சுற்றுப்புறம் எப்படி இருந்தாலும் உறுதியோடு செயல்பட்டு அதிலிருந்து உங்களுக்கான உரத்தைமட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். 

மன அழுத்தம் இல்லாமல் உங்களை ஆனந்தமாக நிர்வகிக்கக் கற்றுக் கொண்டுவிட்டால் நம்ப முடியாதவற்றை கண் கூட நிகழ்த்திக் காட்டலாம்.

Heart Attack Vs. Cardiac Arrest: இரண்டிற்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?

கடிகாரங்கள் காட்டும் 10 மணி 10 நிமிடம் - தத்துவம் என்ன?

இரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கும் 5 பானங்கள்!

தமிழ்நாட்டைத் துருக்கியாக்கி, கேரளாவை ஈராக்காக்கி... என்னங்கடா சொல்லவறீங்க?

ஒரே கனவு இருவருக்கு வேறு வேறு பலன்களைத் தருவது ஏன்?

SCROLL FOR NEXT