Pithru thosha nivarthikku Vazhaikkai Sratham
Pithru thosha nivarthikku Vazhaikkai Sratham 
ஆன்மிகம்

பித்ரு தோஷ நிவர்த்திக்கு வாழைக்காய் ஸ்ராத்தம்?

கல்கி டெஸ்க்

மது முன்னோர்களின் பாவ, புண்ணியங்கள் மூன்று தலைமுறையினருக்கு வந்துசேரும் என்பது நம்பிக்கை. புண்ணியங்களை நமக்கு எடுத்துக்கொண்டு பாவத்தைக் கழுவ வேண்டும். இதற்கு, ‘ஸ்ராத்தம் ஸ்ர்த்தாயிதி' என்று பெயர்.

பித்ரு கர்மாவை சரியாகச் செய்தால், முன்னோர்களின் பாவங்களால் வரும் தோஷம் நம்மை விட்டு நீங்கிவிடும். அப்படிச் செய்யவில்லை என்றால், அந்த தோஷங்கள் அதிகரிக்கும். இது நம்மையும், நமது வம்சத்தையும் மூன்று தலைமுறைகளுக்குப் பாதிக்கும். பித்ரு கர்மா என்பது நாம் நமது மூதாதையருக்குச் செய்யும் கடமை. ஆண்டுதோறும் மூதாதையருக்கு திவசம் மற்றும் அமாவாசை தினங்களில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

இதை நம்மால் எப்படிச் செய்ய முடியுமோ அப்படிச் செய்யலாம். அதாவது, நமது அன்பை, சிரத்தையைக் காட்ட வேண்டும், அவ்வளவுதான். முன்பெல்லாம் நதிக்கரை, கடற்கரை இவற்றின் அருகே வாத்தியார் (அந்தணர்) கொண்டு தர்ப்பணம் கொடுப்பார்கள்.

ஆனால், இன்றைக்கு எல்லோராலும் அதைச் செய்ய முடியாது. அதனால்தான், 'வாழைக்காய் ஸ்ராத்தம்' என்று வைத்திருக்கிறார்கள். அதைச் செய்யலாம். அதாவது, இரண்டு வாழைக்காய், ஒன்பது ஒற்றை ரூபாய், எள், பச்சை அரிசி, வேஷ்டி வாங்கி ஒரு ஏழைக்குத் தானமாகத் தந்து விட வேண்டும். இப்படிச் செய்வதால் முன்னோர்களுக்கு செய்யவேண்டிய சிராத்தத்தை செய்ததாக அர்த்தம். இதனாலும் நமது முன்னோர்கள் திருப்தியுற்று நமக்கு நல்ல பலன்களை அள்ளித் தருவார்கள்.

மணக்கோலத்தில் காட்சி தரும் சிவபெருமான் அருளும் திருத்தலம் எங்குள்ளது தெரியுமா?

கோடைக்கால அலர்ஜிகளுக்கு குட்பாய் சொல்லுங்கள்!

எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிட்டால் ஆரோக்கியம் தெரியுமா?

மாணவர்களுக்கான சிறந்த 6 AI கருவிகள்!

Beehive Ginger: இது இஞ்சி இல்ல ஷாம்பூ… என்னடா சொல்றீங்க?

SCROLL FOR NEXT