Karthigai month 
ஆன்மிகம்

கார்த்திகை மாதத்தில் அசைவம் சாப்பிடலாமா?

ராஜமருதவேல்

ஐப்பசி மாதத்தை தொடர்ந்து வரும் கார்த்திகை மாதம் பக்திமான்களுக்கு முக்கியமான மாதமாகும். கார்த்திகை மாதத்தில் தான் கோடிக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலையிட்டு தங்களது விரதத்தினை தொடங்குவார்கள். அது கார்த்திகை மாதம் முழுவதும் தொடரும். கார்த்திகை மாதம் முருகனுக்கும் உகந்த மாதம். முருக பக்தர்கள் மாலையிட்டு வழிபாட்டை தொடங்குவார்கள். சிவ பெருமானுக்கும் சிறப்பான மாதம் என்பதால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விமர்சையாக கார்த்திகை தீபம் மலை மீது ஏற்றப்படுகிறது.

சிறப்பு வாய்ந்த கார்த்திகை மாதத்தில் மஹா விஷ்ணு நீண்ட கால உறக்கத்திற்குப் பிறகு எழுந்திருப்பார் என்று நம்பப்படுகிறது. இந்த மாதத்தில் மஹாலஷ்மி மற்றும் மஹாவிஷ்ணுவை வழிபடுவது ஒருவரது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் உண்டாக்கும்.

இது தவிர, மகாவிஷ்ணு மற்றும் ஶ்ரீ தேவியின் அருள் பார்வையும் கிடைக்கும். அதனால் இந்த மாதத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

கார்த்திகை மாதத்தில் தினசரி மாலையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது தான் இந்தியர்களின் பாரம்பரிய மரபு. வீட்டில் உள்ள பூஜை அறை , துளசி மாடம் , வீட்டு வாசல் ஆகிய இடங்களில் விளக்கேற்றி லட்சுமி தேவியை வீட்டுக்குள் வரவேற்கலாம். எண்ணெய் தீபம் ஏற்றுவதை விட சுத்தமான பசு நெய் தீபம் ஏற்றினால் நல்லது இது சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும். (சாதாரண விளக்கு எண்ணெய்களில் கலப்படம் இருக்கலாம்.) 

அருகே உள்ள புண்ணிய நதிகளின் கரைகளில் தீபம் ஏற்றியும் வழிபாடு செய்யலாம். பொதுவாக ஆறு என்றாலே அது புண்ணியமிக்கது தான். அதே வேளையில் ஆற்றுக் கரைகளில் உள்ள கோயில்கள், கோவில் குள்ளக்கரைகளின் படிக்கட்டுகளில் தீபம் ஏற்றுதல் சிறப்பான பலன்களை பெற்றுத் தரும்.

கார்த்திகை மாதத்தில் அன்னதானம் செய்வதால் நல்ல பலன் கிடைக்கும். பசுக்களுக்கும் உணவளிக்கலாம். காக்கைகளுக்கு தினசரி உணவளிப்பதால் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். இதனால் பித்ரு தோஷம் நீங்கும். இந்த மாதம் ஆன்மீக சுற்றுலா செல்ல ஏற்ற மாதமாகும்.

திருவண்ணாமலை கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், பழனி முருகன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், ஶ்ரீரங்கம் , திருப்பதி, ஶ்ரீ வில்லிபுத்தூர்  உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று வரலாம். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல விரதமிருக்க ஏற்றக் காலம்! 

இந்த மாதத்தில் தரையில் விரிப்புகள் விரித்து படுத்து தூங்குவது நல்லது. இது ஒரு நபருக்கு அகத் தூய்மையை கொடுக்கிறது.

கார்த்திகை மாதத்தில் நரக சதுர்தசி, கிருஷ்ண சதுர்தசி ஆகிய நாட்களில் மட்டும் உடலுக்கு எண்ணெய் தடவலாம். மற்ற நாட்களில் உடலில் எண்ணெய் தடவக்கூடாது.

பொதுவாக கார்த்திகை மாதம் பெரு மழைக்காலமாகவும் குழப்பமான வானிலையும் கொண்டிருக்கும். இம் மாதத்தில் சுற்றுச் சூழல் மாறுபாடும் ஏற்படும். இந்த மாதத்தில் அசைவம் உண்பதையும் மது அருந்துதலையும் தவிர்க்க வேண்டும். இம்மாதத்தில் அசைவ உணவுகள் எளிதில் ஜீரணமாகாது, மது உடலுக்கு தீமை விளைவிக்கும். சைவ உணவுகளில் கத்திரிக்காய், பாகற்காய், கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும்.

வெற்றிக்கு உதவும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள கற்க வேண்டிய 7 பழக்கங்கள்!

அத்திப்பழம் வெஜிடேரியனா அல்லது நான்-வெஜிடேரியன் ஃபுரூட்டா?

ஆரோக்கியத்தை வாரி வழங்கும் வாழைப்பூ!

Biography of Picasso: 20ஆம் நூற்றாண்டின் கலைப் புரட்சியாளர். 

சிறுகதை: நரையும் நர்மதாவும்!

SCROLL FOR NEXT