திருப்பதி கோயில்
திருப்பதி கோயில் 
ஆன்மிகம்

திருப்பதி போவதாக ப்ளானா? ஐப்பசி மாதம் இந்த தினங்களில் கோயில் மூடல்!

விஜி

ப்பசி பௌர்ணமி நாளில் சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் பல கோயில்களில் பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக கடந்த மாதம் புரட்டாசி என்பதால் கூட்ட நெரிசலில் திருப்பதியே ஸ்தம்பித்தது. தொடர்ந்து ஐப்பசி மாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த மாதம் திருப்பதி ஏழுமலையான் கோயில் எந்த நாட்களில் எல்லாம் மூடப்பட்டிருக்கும் என தெரிந்து கொள்ளலாம்.

நடப்பாண்டு சந்திர கிரகணம் ஐப்பசி பௌர்ணமி நாளில் வருவதால், திருப்பதி கோயிலில் பூஜை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சந்திர கிரகணம் மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் 28ம் தேதி நிகழ உள்ளது. மேஷ ராசியில் குரு, ராகு, சந்திரன் இணைந்து இருக்கும் நேரத்தில் சந்திர கிரகணம் நிகழப்போகிறது. சந்திரன் மட்டுமல்ல, குரு பகவானும் சில மணி நேரங்கள் கிரகணத்தின் பிடியில் சிக்குகிறார்.

இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும் என்பதால் இங்கு தோஷ காலம் கடைபிடிக்கப்படுகிறது. எனவே, கிரகணம் நிகழும் நேரத்திற்கு 5 மணி நேரத்திற்கு முன்பு கோயில்களில் நடை அடைக்கப்படுவது வழக்கம். சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 8 மணி நேரத்திற்கு மேல் கதவு மூடப்பட்டிருக்கும்.

அதாவது, 28ம் தேதி இரவு 7.05 மணிக்கு ஏழுமலையான் கோயிலின் கதவுகள் மூடப்படும். பின் 29ம் தேதி அன்று மீண்டும் திறக்கப்படும். மேலும், சந்திர கிரகணமானது 29ம் தேதி அதிகாலை 1.05 மணி முதல் 2.22 மணி வரை பகுதி சந்திர கிரகணம் நிறைவடைகிறது.

கொன்றை பூவின் ஆரோக்கிய மகத்துவம் தெரியுமா?

உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?

Remote Work: தொழில்நுட்பமும், தொலைதூர வேலைகளும்! இதுதான் எதிர்காலமா? 

18 முறை படையெடுத்தும் 6 முறை தரைமட்டமாகியும் மீண்டெழுந்த ஆலயம்!

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

SCROLL FOR NEXT