3 places in the world that will make you feel like you are on a strange planet! Image Credits: Wticifes
பயணம்

விநோத கிரகத்தில் இருப்பது போன்று உணர வைக்கும் உலகில் உள்ள 3 இடங்கள்!

நான்சி மலர்

ந்த உலகில் எத்தனையோ அழகிய இடங்கள் இருக்கின்றன. இயற்கை உருவாக்கிய அழகோவியமாய் திகழும் அத்தகைய இடங்கள் நம்மை கவர்வது போலவே இன்னும் சில இடங்களை காணும்போது ஒருவேளை தவறுதலாக வேற்று கிரகத்திற்கு வந்து விட்டோமோ? என்ற பிரம்மையை உருவாக்கக்கூடிய விநோதமான சில இடங்களும் இதே உலகில் அமைந்திருக்கிறன. அத்தகைய வித்தியாசமான 3 இடங்களைப் பற்றித்தான் இந்த பதிவில் காண உள்ளோம்.

1. Faroe island.

டென்மார்க்கில் இருக்கக்கூடிய Faroe island அட்லான்டிக் பெருங்கடலில் உள்ள விசித்திரமான தீவாகும்.கடலுக்கு நடுவிலே உயரமான அருவிகள், மலைகள், ஏரிகள், பசுமையான புல்வெளிகள் என்று இந்த தீவை சுற்றி எந்த பக்கம் பார்த்தாலும் மிகவும் அற்புதமாக இருக்குமாம். ஒரு ரிலாக்ஸான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த இடத்திற்கு செல்லலாம்.

2. Spotted lake.

இந்த Spotted lake கனடாவில் இருக்கிறது. இது பார்ப்பதற்கு இயற்கையாக உருவான Artwork போன்று இருக்கும். இங்கே உள்ள தண்ணீர் நிறம் மாறக்கூடியதாகும். பிரிட்டிஸ் கொலம்பியா என்ற பகுதியில் இருக்கும் மிகவும் வித்தியாசமான ஏரி தான் இது. இந்த ஏரியில் Magnesium sulphate, calcium, sodium sulphates போன்ற பலவிதமான கணிமங்கள் அமைந்திருப்பதால் பார்ப்பதற்கு இப்படி வித்தியாசமான அமைப்பில் அமைந்திருக்கிறது.

3. Lencois Maranhenses.

பிரேசிலில் உள்ள தேசிய பூங்காவில் அமைந்திருக்கும் இந்த இடம் 3,80,000 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட வெள்ளைப் பாலைவனம் ஆகும். இந்த வெள்ளைப் பாலைவனத்திற்கு நடுவிலே தண்ணீர் தேங்கி நீலநிறத்தில் பார்ப்பதற்கே மிகவும் அற்புதமாக காட்சியளிக்கும்.

மழைக்காலத்தில் இந்த வெள்ளைப் பாலைவனத்தில் தண்ணீர் தேங்கி நீர்நிலைகளாக உருவாகியிருப்பது காண்போரைக் கவரக்கூடியதாக இருக்கும். ‘எந்திரன்’ படத்தில் வரக்கூடிய காதல் அணுக்கள் பாடல் இங்கே தான் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய அதிசயமான இடங்களுக்கு வாழ்வில் ஒருமுறையாவது சென்று அதன் இயற்கை அழகை ரசித்துவிட்டு மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்வது சிறப்பாகும்.

தினமும் காலை வெண்பூசணி ஜூஸ் குடித்தால் இத்தனை நன்மைகளா?

கடின உழைப்பே தன்னிறைவான வாழ்க்கைக்கு வழி!

70 வயதுக்குப் பிறகும் அறிவாற்றல், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது எப்படி?

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

SCROLL FOR NEXT