Imge credit: Outlook retirement
Imge credit: Outlook retirement
பயணம்

இந்தியாவில் சுற்றிப்பார்க்க வேண்டிய 9 ஆன்மிகத் தலங்கள்!

பாரதி

கடவுள்தான் அனைத்திலும் உள்ளாரே, ஏன் இந்தியா முழுவதும் செல்ல வேண்டும்? என்று சிலர் கேட்பார்கள். நாம் தலங்களை சுற்றுப்பார்ப்பதற்கு முக்கிய காரணம் அந்த இடங்களின் அமைதி மற்றும் அங்கு கிடைக்கும் நிம்மதியும்தான். குறிப்பாக இந்தியாவில் ஆன்மீகம் என்பது மிகவும் முக்கியமானது மற்றும் முதன்மையானதும் கூட. இந்தியாவில் ஏராளமான கோவில்கள் உள்ளன. அந்தவகையில் நீங்கள் வாழ்நாளில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஆன்மீக தலங்களைப் பற்றி பார்ப்போம்.

வாரணாசி:

வாரணாசி

உத்திரப்பிரதேசத்தில் உள்ள இந்த வாரணாசி காசி என்றும் அழைக்கப்படும். கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள இந்த தலம் மிகவும் பழமையானது மற்றும் புனிதமானதும் கூட. இந்துகளின் புனிதத் தலமாக கருதப்படும் இது, மலைப்பாதைகள், கோவில்கள் மற்றும் ஆன்மீக சூழல்கள் ஆகியவற்றிற்கு பெயர் போனது.

அமிர்தசரஸ்:

அமிர்தசரஸ்

பஞ்சாப்பில் உள்ள இந்த அமிர்தசரஸ் சீக்கியர்களின் புனிதத் தலமாகும். இது ஒரு பொற்கோவில் ஆகும். கோவில் வளாகத்தில் உள்ள அமைதியான சூழல் மற்றும் புனிதமான குளம் ஆகியவை ஆழ்ந்த ஆன்மிக சூழலைத் தரக்கூடியவை.

போத்கயா:

போத்கயா

பீகாரில் உள்ள இந்த போத்கயா என்பது புத்தர் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்ற இடமாகும். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமான இக்கோவிலுக்கு உலகம் முழுவதிலிமிருந்து பௌத்தர்கள் புனித யாத்திரையாக இங்கு பயணம் செய்து வருவார்கள்.

கஜீராஹோ:

கஜீராஹோ

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இக்கோவில் பல கடவுள்களுக்கு அற்பணிக்கப்பட்ட ஒரு கோவிலாகும். இங்கு நிறைய கண்கவர் சிற்பங்களும் தனித்துவமான சிற்பங்களும் உள்ளன. ஆன்மீகம் மற்றும் கலைத்திறன் ஆகியவற்றின் தனித்துவத்திற்கு இது பெயர் போனது.

கேதர்நாத் மற்றும் பத்ரிநாத்:

கேதர்நாத் மற்றும் பத்ரிநாத்

இந்த இரண்டு தலங்களும் உத்திரகாண்டில் உள்ள இமையமலையில் உள்ளன. கேதர்நாத் கோவில் சிவனுக்கும் பத்ரிநாத் கோவில் விஷ்ணுவிற்கும் அற்பணிக்கப்பட்டுள்ளன. இவை இந்தியாவிலேயே புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களாகும்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை

தமிழ்நாட்டில் உள்ள இந்த புனித அருணாச்சலேஸ்வரர் கோவில் ரமண மகரிஷியின் ஆன்மீக போதனைகளுடன் தொடர்புடையது. இந்த நகரம் அண்ணாமலையார் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. மேலும் மலையை சுற்றி வருவது ஒரு ஆன்மீக பயிற்சியாகவும் கருதப்படுகிறது.

அஜ்மீர்:

அஜ்மீர்

அனைத்து மதத்தினரும் செல்லக்கூடிய இக்கோவில் ராஜஸ்தானில் உள்ளது. மேலும் இது அஜ்மீர் சூஃபி என்ற துறவிக்காக கட்டப்பட்ட ஆலயமாகும்.

தர்மஷாலா:

தர்மஷாலா

இமாச்சல பிரதேசத்தில் உள்ள இந்த தர்மஷாலா கோவில், திபெத்திய புத்த மதத்தின் ஆன்மீக கோவிலாகும். அமைதியான சூழலும் திபெத்திய மடாலயங்களும் சேர்ந்து இதை ஆன்மீக தலமாக மாற்றின.

ஷீரடி:

ஷீரடி

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள இந்த ஷீரடி கோவில், சாய் பாபாவிற்கு அற்பணிக்கப்பட்டது. இங்கு உலகிலிருந்து பல மதத்தினரும் வருகைத் தருகின்றனர்.

சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!

World Family Doctor Day: கொண்டாடப்பட வேண்டிய ஹீரோக்கள்! 

பெண்களே! உங்கள் முகத்திற்கு ஏற்ற பொட்டு எது?

5 Cool experiments for young science lovers!

உண்டியலின்றி உயர்ந்து நிற்கும் பாலாஜி!

SCROLL FOR NEXT