Mahathma gandhi... 
கோகுலம் / Gokulam

மகாத்மா காந்தியின் பொன் மொழிகள்!

அக்-2 காந்தி ஜெயந்தி!

எஸ்.மாரிமுத்து

ந்திய  விடுதலைக்காக அகிம்சை முறையில் இந்திய சுதந்திர போராட்டத்தை தலைமை ஏற்று வழி நடத்தியவர் மகாத்மா காந்தி. இவர் இயற்பெயர் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி என்பதாகும். மகாத்மா காந்தி இங்கிலாந்தில் பாரிஸ்டர் எனப்படும் பட்டப் படிப்பை முடித்த வழக்கறிஞர் ஆவார். காந்தி தென்னாப்பிரிக்காவில் பணிபுரிந்தபோது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களே அவர் ஒரு மாபெரும் தலைவராக உருவாக காரணமாக இருந்தது. மகாத்மா காந்திக்கு 'மகாத்மா 'என்னும் கௌரவப்பட்டதை வழங்கியவர் ரவீந்திரநாத் தாகூர் ஆவார்.

காந்தி பொன்மொழிகள் -15

கூட்டத்தில் நிற்பது எளிதானது. ஆனால் தனியாக நிற்பதற்கு தைரியம் வேண்டும்.

பலவீனமானவர்களால் ஒருபோதும் மன்னிக்க முடியாது. மன்னித்தல் என்பது வலிமையானவர்களின் பண்பாகும்.

நோயைக் காட்டிலும் நோயைப் பற்றிய பயமே அதிகமான மனிதர்களை கொன்று உள்ளது.

மனிதர்களாகிய நமது மிகப்பெரிய திறமை இந்த உலகை மாற்றுவது அல்ல. மாறாக நம்மை நாமே மாற்றிக் கொள்வது.

இந்த ஆண்டில் நம்மால் எதுவும் செய்ய முடியாத இரண்டு நாட்கள் உள்ளன அவை நேற்று மற்றும் நாளை.

ஒவ்வொரு வீடும் ஒரு பல்கலைக்கழகம். மேலும் ஒவ்வொரு பெற்றோரும்  ஆசிரியர்கள்.

மனித நேயத்தின் மீதான நம்பிக்கையை இழக்காதீர்கள். மனித நேயம் என்பது ஒரு கடல். கடலின் சில துளிகள் அழுக்காக இருப்பதால் கடல் அழுக்காகாது.

உங்களை நீங்களே கண்டுபிடிப்பதற்கான சிறந்த வழி மற்றவர்களுக்கான சேவையில் உங்களை நீங்களே இழப்பதுதான்.

எப்படி சிந்திக்க வேண்டும் என்று தெரிந்தவர்களுக்கு ஆசிரியர் தேவை இல்லை. நாளைக்காக சிந்தியுங்கள் ஆனால் இன்றைக்காக செயல்படுங்கள்.

மனித குலத்தின் மகத்துவம் மனிதனாக இருப்பதில் இல்லை. மனிதாபிமானமாக இருப்பதில் உள்ளது.

மனித குலத்தின் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் அமைதி.

கோபம் அஹிம்சையின் எதிரி. அகங்காரம் அதை விழுங்கும் ஒரு அரக்கன் எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்க்கை இருக்கிறது.

நீங்கள் ஒரு எதிரியை எதிர்கொள்ளும் போதெல்லாம் அவரை அன்பால் வெல்லுங்கள்.

உறவுகள் நான்கு கொள்கைகளை அடிப்படையாக கொண்டவை மரியாதை, புரிதல், ஏற்றுக்கொள்ளல் மற்றும் பாராட்டு.

அன்பு அச்சம் இல்லாதது அன்புள்ள இடத்தில் ஆண்டவன் இருக்கிறார். எவன் தன்னிடம் உள்ள உரைகளை மறைக்கிறானோ அவனே குருடன்.

வாய்மையை தவிர வேறு எந்த ராஜதந்திரமும் எனக்கு தெரியாது. மதம் என்பதன் உட்பொருள் சத்தியமும், அஹிம்சையும்தான். மற்றவர்களை வெல்ல என்னிடம் அன்பைத் தவிர வேறொரு ஆயுதம் இல்லை.

எங்கும் ஒலிக்கத் தொடங்கி விட்டது சுவாமி ஐயப்பனின் சரண கோஷம்!

டேஸ்டியான ராகி சப்பாத்தி - பிரட் தோசை செய்யலாம் வாங்க!

சமூக ஒருங்கிணைப்புக்கு அவசியமாகும் சகிப்புத்தன்மை!

குளிருக்கு இதமாக, ப்ரோட்டீன் நிறைந்த பச்சைப் பட்டாணி-பசலைக் கீரை சூப் செய்யலாமா?

சைபர் கிரைம்: திரைக்குப் பின் அதிகரிக்கும் குற்றங்கள்; சிக்கித் தவிக்கும் மக்கள்! தப்பிக்க என்ன வழி?

SCROLL FOR NEXT