தேவையான பொருள்கள்:
பச்சைப் பட்டாணி 1 கப்
பேபி பசலை இலை 2 கப்
நறுக்கிய வெங்காயம் 1
நறுக்கிய பச்சை மிளகாய் 3
நறுக்கிய பூண்டுப் பல் 2
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
பட்டர் 1 டீஸ்பூன்
வெஜிடபிள் ஸ்டாக் 2 கப்
க்ரீம் 4 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய இஞ்சி துண்டுகள் 1 டீஸ்பூன்
கருப்பு மிளகுத் தூள் 1 டீஸ்பூன்
மக்காச் சோள மாவு 1 டீஸ்பூன்
ஒரெகானோ 1 டீஸ்பூன்
நறுக்கிய மல்லி இலைகள் 2 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை:
பச்சைப் பட்டாணி மற்றும் பசலை இலைகளை ப்லான்ச் (Blanch) செய்து, குளிர்வித்து, மிக்ஸியில் போட்டு மசிய அரைத்துக் கொள்ளவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றவும். அதனுடன் பட்டரை சேர்க்கவும். பின் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டுப் பல் மற்றும் இஞ்சி துண்டுகளை சேர்த்து முப்பது செகண்ட் நன்கு வதக்கவும். அதனுடன் அரைத்து வைத்த பட்டாணி பசலை இலை கரைசல், உப்பு மற்றும் ஸ்பைஸஸ்களை சேர்க்கவும்.
நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது அதனுடன் வெஜிடபிள் ஸ்டாக் சேர்க்கவும். பிறகு சோள மாவை தண்ணீரில் கட்டியின்றி கரைத்து சூப்புடன் சேர்த்து மீடியம் தீயில் ஐந்து நிமிடம் வேகவிடவும். உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்க்கவும்.
பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, க்ரீம் மற்றும் மல்லி இலைகள் சேர்த்து அலங்கரிக்கவும். சூடாகப் பரிமாறவும்.
புரதச்சத்துடன் வேறு பல வைட்டமின்கள் மற்றும் ஊட்டச் சத்துக்கள் நிறைந்த சூப் இது. மீண்டும் மீண்டும் தயாரிக்கத் தூண்டும் சுவையான பச்சைப் பட்டாணி-பசலைக் கீரை சூப்!