Rain... 
கல்கி

மழை குறித்து பல்வேறு ஆச்சர்யத் தகவல்கள்!

பத்மப்ரியா

மழையின் பெயர்கள்:

பெருமழை - ஆசாரம்.

விடா மழை - பனித்தல், சோனை, அடை மழை.

மழைத் துளி - தூறல், திவலை, தூவல், சிதர், சீகரம், ஆலி, தளி, உறை.

ஆலங்கட்டி மழை - ஆலி, கரகம், கனோபலம்.

அடை மழை பெயர்க்காரணம்:

அடைத்த கதவு திறக்க முடியாதபடி இடைவிடாது பெய்யும் மழை என்பதால் அடைமழை என்று பெயர் பெற்றது.

ஆழி மழை:

ஆழி மழை என்றால் கடலில் பெய்யும் மழை என்று பொருள். இதனால் பூமிக்கு நேரடியாக பயன்கள் இல்லை என்றாலும், இயற்கை சமன்பாட்டிற்கு இது பெரிதும் உதவுகிறது. கடல் நீரின் உப்பு தன்மையை குறைப்பதற்கு இது உதவுகிறது.

தஞ்சை பெரிய கோவிலின் மிகச் சிறந்த வடிகால் அமைப்பு:

புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலின் கட்டுமான அற்புதங்களில் ஒன்று அதன் வடிகால் கட்டமைப்பு. எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அந்தக் கோவிலில் நீர் தேங்குவதைப் பார்க்க முடியாதாம்.

கோவிலின் உள்ளே இருக்கும் வடிகால்கள் கோவிலில் உள்ள நீரை வெளிப்பிரகாரம் வழியாக அருகில் உள்ள சிவகங்கை குளத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றும் நாம் அதை நேரில் காணமுடியும்.

மழை பெய்வதை முன்கூட்டியே உணர்த்தும் உயிரினங்களின் நடவடிகைகள்;

மயில் - தனது தோகையை விரித்து நடனம் ஆடும்.

எருமை - வானத்தைப் பார்த்து முக்காளமிடும்.

ஈசல் - தனது இருப்பிடத்தை விட்டு வெளியே வந்து பறக்கும்.

பூனை - வீட்டு அடுப்பங்கரையினுள் பதுங்கி இருக்கும்.

பறவைகள் - வானத்தில் தாழ்வாகப்பறக்கும்.

தட்டான் பூச்சிகள் - வானில் தாறுமாறாக பறக்கும்.

செயற்கை மழை;

அமெரிக்காவின் மொன்டானா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மழை பெய்விக்கும் பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் வறண்ட பகுதிகளிலும் மழை பெய்விக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தாவரங்கள் மேல் படரும் பாக்டீரியா காற்று மூலம் விண்ணுக்குச் செல்கிறது. இந்தப் பாக்டீரியா மீது உருவாகும் ஐஸ் பல்கிப் பெருகுகிறது. இந்த ஐஸ்கட்டிகள் மழை மேகங்களாக மாறுகின்றன.

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

உன்னால் முடியும் பெண்ணே! இந்த 5 அடிப்படை விஷயங்கள் இருந்தால் போதுமே!

Dear Girls… உங்கள் தொப்பையை மறைக்க இப்படி ட்ரெஸ் பண்ணுங்களேன்!

'இளமையில் கல்' என்பதன் அர்த்தமும் அதன் புரிதலும்... இது ரொம்ப தப்பாச்சே!

SCROLL FOR NEXT