மங்கையர் மலர்

என்னை எழுத்தாளராக உயர்த்தியது மங்கையர் மலர்தான்!

எஸ்.ராஜம்

ங்கையர் மலர் பிறந்தது முதல் அவளை நான் அறிவேன். எனவே, எங்களை தாயும், மகளும் எனலாம். இணைபிரியா தோழிகள் என்றும் சொல்லலாம். இதை விட சிறந்த உதாரணங்கள் எனக்கு சொல்லத் தெரியவில்லை. வாசகியாய் இருந்த என்னை எழுத்தாளராக உயர்த்தியது மங்கையர் மலர்தான். சொல்ல விரும்புகிறோம், அன்புவட்டம், கவிதைத் தூறல், கதைகள், கட்டுரைகள், டிப்ஸ் என்று ஒவ்வொன்றிலும் பங்குபெற வைத்து, வெளியிட்டு, சன்மானமும், புடவை போன்ற பரிசுகளும் வழங்கி என்னை ஊக்குவித்து, உற்சாகப்படுத்தியது மங்கையர் மலரே.

'எங்கே இருக்கிறாய் என் தோழியே' கட்டுரை போட்டி நடுவராக தேர்ந்தெடுத்து, என்னை கௌரவித்ததும் மங்கையர் மலரே. மங்கையர் மலர் எந்த வடிவில் வந்தாலும் தொடர்ந்து அவளுடன் பயணிப்பேன். என்னோடு என் மகன் ஆர். பிரசன்னா, மருமகள் ஆர். பத்மப்ரியாவும் வாசகர்களாகவும், படைப்பாளிகளாகவும் இணைந்து செயல்படுகிறார்கள். எங்கள் குடும்பத்தில் ஒரு அங்கமான மங்கையர் மலரை, "நூறாண்டு காலம் வாழ்க வளர்க" என்று தாயாக வாழ்த்துகிறேன்.

கோடை காலத்திற்கான (அக்னி நட்சத்திரம்) ஆரோக்கிய குறிப்புகள்!

உங்க அறைக்கு எத்தனை டன் ஏசி வாங்கணும்னு தெரியலையா? அப்போ இதை முழுசா படிங்க!

சிறுகதை; தென்னை மரமும், வாழை மரமும்!

தயக்கம் இருக்க வேண்டியது எதில் தெரியுமா?

கோடை வெயிலில் இருந்து தப்பிக்க லஸ்ஸி வகைகள் செய்யலாம் வாங்க!

SCROLL FOR NEXT