செய்திகள்

#BREAKING; நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை : உச்ச நீதி மன்றம் உத்தரவு.

கல்கி டெஸ்க்

நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 6 பேருடன் பேரறிவாளனும் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்தார். அவர் தன்னை விடுவிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்ய, அதன் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

அதையே காரணம் காட்டி, நளினி உட்பட மீதி 6 பேரும் தங்களையும் விடுவிக்க் கோரி  உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று அவர்களை விடுதலை செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவெடுக்காத நிலையில், உச்சநீதிமன்றம் நளினி உட்பட 6 பேரையும் விடுதலை செய்து இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொளுத்தும் வெயிலிலும் ஒரு நன்மை இருக்கிறது; எப்படி தெரியுமா?

அரிசோனா பாலைவனத்தில் பயிற்சி செய்யும் நாசா...  காரணம் தெரிஞ்சா ஆடிப் போயிடுவீங்க! 

IPL 2024: ருதுராஜிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்படலாம் – இர்பான் பதான் எச்சரிக்கை!

இதய மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு புதிய மைல்கல்!

பெண்களுக்கு கைமேல் பலன் தரும் கன்னிகா பரமேஸ்வரி வழிபாடு!

SCROLL FOR NEXT