செய்திகள்

தகாத வார்த்தைகளில் திட்டி மிரட்டிய திமுக பிரமுகர்

கல்கி டெஸ்க்

எங்களை பகைச்சிக்கிட்டா நீங்க தொழில் பண்ண முடியாது; இங்க இருக்க முடியாது, உங்கள அடித்துக் கொன்று விடுவேன் என திமுகவைச் சேர்ந்த மாணிக்கம் மிரட்டி உள்ளார். சேலத்தில் தலித் இளைஞர் மீது சாதி வன்மத்தை கக்கிய திமுக ஒன்றிய செயலாளர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

சேலம் சூரமங்கலம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதி திருமலைக்கிரி. கடந்த 26 ஆம் தேதி இரவு இங்குள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் கருவறை முன்பு நின்று சாமி கும்பிட வேண்டுமென்று கூறியுள்ளார் தலித் இளைஞன் பிரவீன்குமார். அதற்கு அங்குள்ள இடைநிலை சமூக பிரிவு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே தலித் இளைஞன் பிரவின் குமார் சாமி கும்பிடாமல் திரும்ப வந்துவிட்டார்.

இந்த விஷயத்தை அப்பகுதி மக்கள் திமுகவின் சேலம் ஒன்றிய செயலாளரும் தற்போதைய திருமலைகிரி ஊராட்சி மன்ற தலைவருமான மாணிக்கம் என்பவரிடம் கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து திருமலைகிரி ஊர் பெரிய மாரியம்மன் கோவில் முன்பு மாணிக்கம் தலைமையில் பஞ்சாயத்து கூட்டியுள்ளனர். அப்போது, பிரவீன்குமார் மற்றும் அவரது தாய், தந்தைக்கு தகவல் சொல்லி பஞ்சாயத்துக்கு வரவழைத்துள்ளனர். அங்கு வந்த பிரவீன்குமாரை அவரது தாய், தந்தை மற்றும் அங்கிருந்த இடைநிலை சமூக மக்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளால், கொச்சை கொச்சையாக திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளார் மாணிக்கம்.

மேலும், அவர் மிரட்டி கொண்டிருக்கும்போதே அப்பகுதியை சேர்ந்த மற்றொரு நபர், “இவன் இந்த கோவில் 18 பட்டிக்கு சொந்தமானது என்று பேசுகிறான், இவன் யாரோ சொல்லிக் கொடுக்கும் பேச்சை கேட்டு தான் இப்படி பேசுகிறான்” என்று சாதி ஆதிக்க வெறியோடு பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பூதாகரமாகிய நிலையில், திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் மீது கண்டனங்கள் குவிந்து வந்தன.

இந்த நிலையில், தலித் இளைஞர் மீது சாதி வன்மத்தை கக்கிய திமுக ஒன்றிய செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

சேலம் கிழக்கு மாவட்டம், சேலம் தெற்கு ஒன்றியக் கழகச் செயளாலர் டி. மாணிக்கம், கழக கட்டுபாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கையிடம் சுறுசுறுப்பை கற்றுக் கொள்ளுங்கள்!

தலைக்கு ஷாம்பு பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க!

வாழ்க்கை என்பது கொடுக்கல் வாங்கல் மட்டுமல்ல…

புடவைக் கட்டும் பொழுது பெண்கள் செய்யக்கூடாத 9 தவறுகள்!

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

SCROLL FOR NEXT