வாழ்க்கை என்பது கொடுக்கல் வாங்கல் மட்டுமல்ல…

Give unconditional love
Lifestyle articles
Published on

தாயம் இல்லாமல் உள் நோக்கம் இல்லாமல் எதையும் செய்யத்தயாராக இல்லாதவர்களால் இந்த சமூகம் நிரம்பிவிட்டது. அதனால் யாவற்றையும் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதற்கு இந்த சமூகம் பழகிவிட்டது. வாழ்க்கையை முழுமையாக  அனுபவித்து வாழ வேண்டுமானால், குறைவற்ற அன்பைச் செலுத்திப்பாருங்கள்.  மாறாக வாழ்க்கையை கொடுக்கல் வாங்கலாம் மட்டுமே பார்க்க ஆரம்பித்தீர்களானால்  உங்கள் நிம்மதி தொலைந்துவிடும். எல்லாவற்றிலும் உங்களுக்கான ஆதாயத்தை மட்டுமே தேடிக் கொண்டிருந்தால், மனதுக்குள் சாத்தானை அனுமதித்து விட்டீர்கள் என அர்த்தம். 

தேவாலயத்தில் ஒவ்வொரு கூட்டத்திலும் அன்பின் மேன்மையைப் பற்றி போதனை செய்யும் பாதிரியார் தெருவில் சென்று கொண்டிருந்த போது ,வழியில் ரத்த வெள்ளத்தில் ஒருவர் துடிப்பதைத் பார்த்தார்‌ அவரைப் புரட்டியவர் அது கொடிய சாத்தான் என்பதை அறிந்து" உன்னைப் போய் காப்பாற்றுவதா? உன்னை இந்த உலகிலிருந்து விரட்டுவதற்குத்தானே அத்தனை பாதிரியார்களும்  போராடிக்கொண்டிருக்கிறோம்" என்றார்.

பகைவனையும் நேசி என்று ஏசு சொல்லியிருப்பதை மறந்து விட்டீர்களா" என்றது சாத்தான். சாத்தான் வேதம் ஓதுவதைக் கேட்கத் தயாராக இல்லை என் பாதிரியார் வேகமாகை நடக்க ஆரம்பித்தார். உடனே சாத்தான் "எனக்காகச் சொல்லவில்லை. உங்களுக்காகத்தான் சொல்கிறேன். என்னைக் காப்பாற்றவில்லை என்றால் இழப்பு உங்களுக்குத்தான். சாத்தான் என்ற ஒன்று இல்லாவிட்டால் யார் கடவுளைத் தேடி வருவார்கள்" என்றது. யோசியுங்கள். தேவாலயத்துக்கு மக்கள் வருவது நின்றுவிட்டால் உங்கள் பிழைப்பு என்ன ஆகும் என்றது சாத்தான்.

அதற்கு மேல் பாதிரியார் தயங்கவில்லை. சாத்தானை அள்ளிப் போட்டுக் கொண்டு மருத்துவமனை சென்றார். பாதிரியாரைக்கூட  மசிய வைக்கும் கொடுக்கல் வாங்கல்தான் சாத்தானின் சாமர்த்தியமான வியாபாரம். வாழ்க்கையை கொடுக்கல் வாங்கலாகவே மட்டும் பார்ப்பீர்கள். ஆனால் உங்கள் மனதை சாத்தான் வசம் ஒப்படைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம். அப்புறம் உள்ளும் வெளியும் நரகம்தான் போராட்டம்தான். உங்களுக்கு மரியாதை என்பது நீங்கள் எவ்வளவு வெற்றிகரமான வியாபாரி என்பதில் அல்ல. நீங்கள் எந்த அளவுக்கு மனிதத்தன்மையுடன் நடந்து கொள்கிறீர்கள் என்பதில்தான். 

இதையும் படியுங்கள்:
குதூகல வெற்றி வேண்டுமா? குழந்தைகளாக மாறுங்கள்!
Give unconditional love

ஒருவர் துக்கத்தை மறக்க மதுக்கடை போனார். அவர் மனைவியோ இன்ஷுரன்ஸ் கம்பெனிக்குப் போனாள். மேனேஜரின் அறையில் புயல் போல் நுழைந்தாள். "எங்கள் தானியக் கிடங்கை 5 லட்சத்திற்கு இன்ஷுர் செய்திருக்கிறோம்.  அந்தப் பணத்தை உடனே எண்ணி வையுங்கள் என்றார். அதற்கு மேனேஜர் "அம்மணி, நீங்கள் எந்த தொகைக்கு காப்பீடு எடுத்திருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. உண்மையிலேயே அதற்கு அந்த மதிப்பு உண்டா என்பதை தீர்மானித்து விட்டுதான் பணம் செட்டில் செய்வோம்" என்றார்

மனைவி யோசித்தார். அதுதான் இங்கே விதிமுறை என்றால் என் கணவர் மீது எடுத்திருக்கும் இன்ஷுரன்ஸ் ஐ உடனே ரத்து செய்யுங்கள் என்றார். உங்கள் உண்மையான மதிப்பு வெளியில் நீங்கள் எவ்வளவு வெற்றிகரமாக செயல்பட்டு இருக்கிறீர்கள் என்பதில் இல்லை. உள்ளுக்குள் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதில்தான் உள்ளது. உங்களுக்கு ஆதாயம் என்பதற்காக அடுத்தவரை சுரண்ட நினைத்தால் அதற்கான சாமர்த்தியத்தை பயன்படுத்துவதில் நீங்கள் உங்களையே எரித்துக் கொள்வீர்கள். அதை விடுத்து நீங்கள் என்ன தொழிலில் ஈடுபட்டிருந்தால் உம் அடுத்தவர் மீது இருக்கும் அக்கறையை வெளிப்படுத்தும் ஒரு சாதனமாக  அமைத்துப் பாருங்கள். வெற்றியுடன் அமைதியும் ஆனந்தமும் தேடிவரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com