அமேசான் 
செய்திகள்

18,000 பேரை பணிநீக்கம் செய்யும் அமேசான் நிறுவனம்!

கல்கி டெஸ்க்

இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் மற்றும் வணிக மென்பொருள் தயாரிப்பாளரான சேல்ஸ்போர்ஸ் ஆகியவை சுமார் 18,000 பணியாளர்களை வேலை நீக்கம் செய்யப்போவதாக புதன்கிழமை தெரிவித்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் வரலாற்றில் இது மிகப்பெரிய பணிநீக்கம் என கருதப்படுகிறது.

அமேசான் செலவினங்களைக் குறைப்பதற்காக இந்த பணிநீக்க நடவடிக்கையை செய்யவிருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே டிவிட்டர் , மெட்டா போன்ற பெரிய கார்ப்ரேட் நிறுவனங்கள் லே ஆப் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை தொடர்ந்து தற்போது அமேசானும் இவ்வாறு ஆட்குறைப்பில் ஈடுபடுவது கவலை தருவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அமேசான் நிறுவனத்தில் தற்போது உலகம் முழுவதும் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். அமேசானின் இந்த பணி நீக்க நடவடிக்கைகள் சில சில்லறை வர்த்தக பிரிவு, மனிதவள மேம்பாட்டுத் துறையில் இருக்கும் என்று தகவல் கசிந்துள்ளது. அமேசான் நிறுவனம் இந்த லே ஆஃப் திட்டத்தை பல மாத ஆய்வுக்குப் பின்னரே எடுப்பதாகவும் ஏற்கெனவே லாபமற்ற சில துறைகளுக்கு இது தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அந்த அமெரிக்க நாளிதழ் கருத்து தெரிவித்துள்ளது.

அமேசான் நிறுவனத்தில் 15 லட்சம் உலகளாவிய பணியாளர்களில் இது ஒரு பகுதியே. இதில் அமேசான் பிரஷ் (Amazon Fresh) மற்றும் அமேசான் கோ (Amazon Go) ஆகியவை அடங்கும். இது குறித்து தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி கூறியதாவது:- கடந்த காலங்களில் அமேசான் நிச்சயமற்ற மற்றும் கடினமான பொருளாதாரங்களை எதிர்கொண்டது "இந்த மாற்றங்கள் வலுவான செலவுக் கட்டமைப்புடன் எங்களது நீண்ட கால வாய்ப்புகளைத் தொடர உதவும் என கூறினார்.

அமேசான் வேலை இழப்பு கட்டணம், இடைநிலை சுகாதார காப்பீட்டு நன்மைகள் மற்றும் வேலை வாய்ப்பு ஆதரவு ஆகியவற்றையும் வழங்குகிறது. சேல்ஸ்போர்ஸ், சுமார் 8,000 ஊழியர்களை அல்லது அதன் பணியாளர்களில் 10சதவீதம் பேரை பணிநீக்கம் செய்வதாகக் கூறி உள்ளது.சேல்ஸ்போர்ஸின் உயர்மட்டத் தரவரிசையில் ஏற்பட்ட ஒரு அதிர்வு காரணமாக பணிநீக்கங்கள் செய்யப்படுகின்றன.

இந்நிறுவனத்தின் 23 ஆண்டுகால வரலாற்றில் மிகப் பெரிய பணி நீக்கமாகும். வேலையை இழக்கும் சேல்ஸ்போர்ஸ் தொழிலாளர்கள் கிட்டத்தட்ட ஐந்து மாத ஊதியம், உடல்நலக் காப்பீடு, தொழில் வளங்கள் மற்றும் பிற நன்மைகளைப் பெறுவார்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டிலிருந்து ஸ்மார்ட் போன்கள் விலை உயரும் என ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அறிவிப்பு!

விமர்சனம்: கங்குவா - படக்குழுவின் பேட்டிகளும் இப்போது படமுமே 'மீம் மெட்டீரியல்'கள் ஆகிப் போச்சே!

காவிரியில் கடைமுழுக்காடி ஜன்மாவை கடைத்தேற்றுவோம்!

நிதானமாக இருப்பதால் கிடைக்கும் லாபம் என்ன தெரியுமா?

NISAR - இஸ்ரோ - நாசா கூட்டு முயற்சியில் பேரிடர் கண்காணிப்பு செயற்கைக்கோள்!

SCROLL FOR NEXT